“யசோதா“ படத்திற்காக இத்தனை கோடியில் செட்டா… எல்லாமே சமந்தாக்காகத்தான் !

சென்னை : நடிகை சமந்தா நடித்து வரும் யசோதா திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

யசோதா படத்தை எவ்வளவு பிரமாண்டமாக எடுக்க முடியுமோ அவ்வளவு பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத், இப்படத்திற்காக பல கோடி ரூபாயில் பிரம்மாண்ட செட் அமைத்துள்ளார்.

யசோதா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் முடிவடைந்த நிலையில் 2ம் காட்ட படப்பிடிப்பு பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது.

யசோதா

யசோதா

அறிமுக இயக்குநர்கள் ஹரி ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா யசோதா படத்தில் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டைட்டில் லுக்கை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, மதுரிமா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

இந்தப் படத்துக்காக ரூ.3 கோடி செலவில் பிரமாண்ட நட்சத்திர ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் கூறும்போது, ​​சமந்தா கதாநாயகியாக நடிக்கும் யசோதா திரைப்படத்தின் கதை நட்சத்திர ஓட்டலின் பின்னணியில் நடக்கிறது. இதற்காக பல நட்சத்திர ஓட்டலுக்கு சென்றோம், ஆனால், தொடர்ந்து 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்துவது சிரமாக இருந்தது. இதனால், கலை இயக்குநர் அசோக் மேற்பார்வையில் நானக்ராம்குடாவின் ராமாநாயுடு ஸ்டுடியோவில் 3 கோடி மதிப்பிலான 2 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

படப்பிடிப்பு தொடங்கியது

படப்பிடிப்பு தொடங்கியது

இதில் டைனிங் ஹால், லிவிங் ரூம், கான்ஃபரன்ஸ் ஹால் என 7 முதல் 8 செட்கள் உள்ளன. பிப்ரவரி 3-ம் தேதி முதல் படப்பிடிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோரின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

சமந்தா பல படங்களில்

சமந்தா பல படங்களில்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கிறது. கன்னடம், மலையாளம், இந்தியிலும் ஒரே நேரத்தில் டப் செய்தும் வெளியிடவுள்ளனர். சமந்தா தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும், தெலுங்கில் சகுந்தலம் படங்களிலும் நடித்துவரும் சமந்தா, அடுத்ததாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பெயரிடாதப் படம், தி ஃபேமிலி மேன் ராஜ் டிகே இயக்கும் வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X