வேறலெவல்.. ட்ரெட்மில்லில் டான்ஸ்.. அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ.. கமல் போலவே கலக்கும் இளைஞர்!

சென்னை: ட்ரெட்மில்லில் "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ" பாடலுக்கு நடனமாடும் இளைஞரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ட்ரெட்மில்லில் ஓடும்போதே பலர் விழுந்து வாரும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நிலையாக நின்று ஸ்டெப் போட்டு ஆடுகிறார் இந்த இளைஞர்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல் போலவே முக பாவணைகளுடன் பதிவிடும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களிலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினியை போல

உலக நாயகனை போல மட்டுமின்றி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவும் பேசி அசத்தி வருகிறார் அஸ்வின். 25 வருடங்கள் கழித்து மீண்டும் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்த தர்பார் படத்தின் ரிலீஸ் சமயத்தில், மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் போலவும், ரஜினி நடித்த படங்களில் வரும் பஞ்ச் வசனங்களையும் பேசி போட்ட வீடியோ வேற லெவலில் ரசிகர்களின் கவனத்தை அள்ளியது.

நாயகன் கமல்

கடந்த ஜூன் 2ம் தேதி கொண்டாடப்பட்ட இயக்குநர் மணிரத்னத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற நாயகன் படத்தின் வசனங்களை கமல் போலவே நடித்து பேசி கலக்கி இருந்தார் இந்த அஸ்வின் குமார்.

கமல் பக்தன்

தனது சமூக வலைதள பக்கம் முழுவதும் நடிகர் கமல்ஹாசன் நடித்த படங்கள் குறித்தும், சகலகலா வல்லவன் செய்த சாதனைகளின் பட்டியல் குறித்துமே பதிவிட்டு வருகிறார் இந்த தீவிர கமல் பக்தன். கமல் போலவே முக சாயலை கொண்டு இருக்கும் இவர், செய்யும் விசயங்களும் வீடியோக்களும் கமல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

ட்ரெட்மில்லில் அண்ணாத்த

சாதாரணமாக நடக்கவும், ஓடவுமே ட்ரெட்மில்லில் பார்த்து பார்த்து பலரும் செய்து வரும் நிலையில், சர்வ சாதாரணமாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ" பாடலுக்கு கமலை போலவே ட்ரெட்மில்லில் நடனமாடி அஸ்வின் கலக்கும் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் ரசிகர் ஆகிட்டா அப்படித்தான்

அவர் ரசிகர் ஆகிட்டா அப்படித்தான்

வேற லெவல் ப்ரோ, சூப்பரா இருக்கு, சான்ஸே இல்ல, யாரும் இதை முயற்சிக்க வேண்டாம், கமல் மாதிரியே இருக்கீங்க, ஆடுறீங்க என பல பாராட்டு கமெண்ட்டுகள் அஸ்வின் குமாரின் இந்த அற்புத திறமைக்கு குவிந்து வருகின்றன. மேலும், இந்த ரசிகர் தனது கமெண்ட்டில், "கமல் ரசிகராக மாறிவிட்டால், அவரை போலவே வித்தியாசமாக சிந்திக்க தோன்றிவிடும்" எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X