Trisha - த்ரிஷாவுடன் திருமணம்.. லியோ படத்திலிருந்து அவரை வெளியேற்றுங்கள் - பரபரப்பை கிளப்பும் சூர்யா
சென்னை: Trisha (த்ரிஷா) த்ரிஷாவுடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் எனவே லியோ படத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் ஏ.எல்.சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் த்ரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்றதன் மூலம் பிரபலமான அவர் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஜோடி படத்தில் துணை நடிகையாக வந்த பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ரிலீஸாவதற்கு கால தாமதம் ஆனது. இதனால் அமீர் இயக்கத்தில் மௌனம் பேசியதே படம் ரிலீஸாகி அது த்ரிஷாவுக்கு முதல் படமாக அமைந்தது.

முன்னணி ஹீரோயினாக மாறிய த்ரிஷா: முதல் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. த்ரிஷாவின் நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. மிஸ் சென்னை பட்டம் வென்றவர் என்ற அடையாளம் ஏற்கனவே இருக்க அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் அறிமுகமான சில படங்களிலேயே விக்ரம், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். மேலும் இன்னும் பல வருடங்களுக்கு த்ரிஷாவின் அலைதான் அடிக்கப்போகிறது என ஆரூடம் கூறப்பட்டது.
ரசிகர்களின் மனதை கவர்ந்த தனலட்சுமி: தொடர்ந்து படங்கள் நடித்துவந்தவர் 2004ஆம் ஆண்டு விஜய்யுடன் கில்லி படத்தில் நடித்தார். தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. மேலும் அப்படத்திலிருந்து த்ரிஷா ரசிகர்களின் மனதை கவர்ந்த கனவுக்கன்னியாக மாறினார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாகவும் விஜய் - த்ரிஷா ஜோடி மாறியது.

யாராலும் அசைக்க முடியாத த்ரிஷா: அதனையடுத்து அஜித், சூர்யா, ஆர்யா, விஷால், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என கோலிவுட்டின் டாப் ஹீரோக்களுடனும் நடித்து் நடித்து யாராலும் அசைக்க முடியாத இடத்துக்கு கோலிவுட்டில் நகர்ந்தார் த்ரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்தார். 2002ஆம் ஆண்டு அறிமுகமான த்ரிஷா இப்போதுவரை டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இடையில் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி நின்றும் போனது.
லியோ படத்தில் கமிட்டான த்ரிஷா: இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் த்ரிஷா. அவர் கடைசியாக விஜய்யுடன் குருவி படத்தில் இணைந்து நடித்திருந்தார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி என்பதால் மீண்டும் இருவரையும் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

த்ரிஷாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் - ஏ.எல்.சூர்யா: இந்நிலையில் இயக்குநர், இசையமைப்பாளர், உத்வேக பேச்சாளர் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் ஏ.எல்.சூர்யா அளித்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், "லியோ படத்திலிருந்து த்ரிஷாவை வெளியேற்ற வேண்டும். ஏனென்றால் நான் அவரை காதலித்துவருகிறேன்.
எனக்கும் த்ரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. விஜய்க்கு என் மீது பெரிய பொறாமை இருக்கிறது. நானும் த்ரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை" என்றார்.
யார் இந்த ஏ.எல்.சூர்யா?: ஏ.எல்.சூர்யா தன்னைத்தானே இசையமைப்பாளர், இயக்குநர் என்று கூறிக்கொள்பவர். ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்துதரும்படி கேட்டிருக்கிறார். மேலும் பத்மப்ரியாவின் தொலைபேசி எண்ணை கேட்டும் நச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மீது புகார் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











