வெள்ளைக்கார பெண் பாடும் 'மலர்ந்தும் மலராத' பாடல்.. அள்ளும் லைக்ஸ்.. வைரலாகும் அசத்தல் வீடியோ!

Recommended Video

வெள்ளைக்கார பெண் பாடும் 'மலர்ந்தும் மலராத' பாடல்.. வைரலாகும் அசத்தல் வீடியோ!

சென்னை: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பாடும் மலர்ந்தும் மலராத பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் சமந்தா ரேயான். இவர் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் முழுக்க முழுக்க தமிழர் முறைப்படி நடைபெற்றது. சமந்தாவுக்கு தமிழ் மீதான பற்று அதிகம்.

தமிழ் மீது ஆர்வம்

தமிழ் மீது ஆர்வம்

கண்ணனை காதலிக்கும் காலத்தில் இருந்தே தமிழை கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறார் சமந்தா. தமிழகத்தின் மருமகளான பின்பு தமிழ் மொழி மீது தனது முழு ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார்.

சேலை, வகுட்டில் குங்குமம்

சேலை, வகுட்டில் குங்குமம்

தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் சேலை, நெற்றியில் பொட்டு, வகுட்டில் குங்குமம் என தமிழ் பெண்களைப் போலவே அசத்தலாக உள்ளார் சமந்தா. இவர் அடிக்கடி தமிழ் மீது தனக்குள்ள பற்றை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

மெர்சல் பட பாடல்

அந்த வகையில் கடந்த மாதம் மெர்சல் படத்தில் இடம்பெற்ற நீதானே பாடலை பாடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

மலர்ந்தும் மலராத..

இந்நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடிப்பில் வெளியான பாசமலர் படத்தில் இடம்பெற்ற மலர்ந்தும் மலராத பாடலை பாடியுள்ளார். டிவிட்டரில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை பாராட்டி வருகின்றனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

சமந்தாவின் இந்த வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X