குடும்பத்து பெயரை கெடுக்காதே, நடிப்பை நிறுத்து: வாரிசு நடிகரை அறைந்த பெண்

By Siva

மும்பை: தான் நடித்த படத்தை பார்த்த பெண் ஒருவர் கோபத்தில் தன்னை கன்னத்தில் அறைந்ததாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார். அமிதாபின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு பட வாய்ப்புகள் வருவதாக நெட்டிசன்கள் அவரை கலாய்க்கின்றனர்.

இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் பற்றி பேசியுள்ளார் அபிஷேக்.

தியேட்டர்

தியேட்டர்

நான் நடித்த ஷராரத் படம் 2002ம் ஆண்டு வெளியானது. படம் எப்படி ஓடுகிறது என்பதை பார்க்க மும்பையில் உள்ள கெய்ட்டி கேலக்ஸிக்கு சென்றேன். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ஒரு பெண் என்னை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். உன் குடும்பத்து பெயரை கெடுக்கிறாய், நடிப்பதை நிறுத்திக் கொள் என்று அந்த பெண் கூறினார் என்று அபிஷேக் கூறியுள்ளார்.

மோசம்

மோசம்

அந்த பெண் என்னை அறைந்து அப்படி சொன்னபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் இன்று அதை நினைத்து பார்த்து சிரிக்க முடிகிறது என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். அபிஷேக் நடிப்பில் அண்மையில் வெளியான மன்மர்சியான் சரியாக போகாததற்கு அவர் தான் காரணம் என்று கூறி ட்விட்டரில் அவரை பலரும் கலாய்த்தனர்.

நடிப்பு

நடிப்பு

அபிஷேக் நீங்கள் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு வடாபாவ் கடை வைக்கலாம். திறமை இல்லாமல் சும்மா அப்பாவின் பெயரை வைத்துக் கொண்டு காலம் தள்ள வேண்டாம் என்று ட்விட்டரில் அவரை அசிங்கப்படுத்தியுள்ளனர். தன்னை கேவலப்படுத்தி பலரும் போட்ட ட்வீட்டுகளை பார்த்த அபிஷேக் பதில் அளித்துள்ளார்.

படம்

படம்

என் மீது பழிபோடும் முன்பு தயவு செய்து படத்தின் வசூல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எதையும் தெரிந்து கொள்ளாமல் குறை கூற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் அபிஷேக் பச்சன். நடிப்பில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்த அவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X