கொஞ்ச நாளா உங்களுக்கு குசும்பு அதிகமாகிடுச்சு.. விஜயை வம்பிழுத்த இளம் நடிகர்.. டிவிட்டை பாருங்க!

நடிகர் விஜய் வர வர அதிகமாக குசும்பாக பேசுகிறார் என்று இளம் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

Vijay Speech at Bigil Audio Launch : விஜய் பேசிய அந்த ஒரு விஷயம்-வீடியோ

சென்னை: நடிகர் விஜய் வர வர அதிகமாக குசும்பாக பேசுகிறார் என்று இளம் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடந்தது

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று ஒளிபரப்பானது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதில் பேசிய விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நிறைய விஷயங்கள் நடந்து விட்டது. இதில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது யாருமே கோபம் கொள்ளவில்லை. தேவையில்லாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் புகார் கூறுகிறார்கள்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

என்னுடைய முதலாளி ரசிகர்கள் தான். உங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நாம் விளையாடும் வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நம்மை வளர விடாமல் தடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். நமக்கு எதிராக சிலர் குழி பறிக்க முயற்சி செய்வார்கள், என்று குறிப்பிட்டார்.

சாந்தனு

இந்த நிலையில் விஜயின் இந்த பேச்சு குறித்து நடிகர் சாந்தனு டிவிட் செய்துள்ளார். அதில், அண்ணா பேசுன ஒவ்வொரு வார்த்தையும் சிறப்பு. ரசிகர்களையும், படத்தில் வேலை செய்த ஒவ்வொரு பணியாளர்களுக்கு மறக்காமல் அவர் நன்றி சொல்வதும் சிறப்பு.

எப்படி தளபதி

எப்படி தளபதி

அதனால்தான் அவர் தளபதியா இருக்கார். அவர் நேர்மையான நபர். நல்ல முன்னுதாரணம். இப்ப கொஞ்ச நாளா அவர் பேச்சில் குசும்பும் சேர்ந்து வருகிறது. அவர் பேசிய எல்லா வார்த்தைகளும் எனக்கு பிடித்து இருந்தது, என்று சாந்தனு தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X