Jailer - கமல் கார் கொடுத்தாரு.. ஜெயிலர் சக்சஸுக்கு ரஜினி கொடுக்கும் பரிச பாருங்க.. நெட்டிசன்கள் கலாய்

சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு கொடுக்கப்படவிருக்கும் பரிசு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் ஜெயிலர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களின் ஆவலை படமானது பூர்த்தி செய்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியே நிறைந்திருக்கிறார் என்றும்; ரொம்ப நாள் கழித்து இப்படி ரஜினியை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்ததாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

A leather Wallet is a Gift to those who have worked in Jailer

நெல்சனுக்கு பாராட்டு: ரஜினிக்கு எவ்வளவு பாராட்டு தெரிவித்தார்களோ அதே அளவு நெல்சன் திலீப்குமாருக்கும் தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். மேக்கிங் எல்லாம் அபாரமாக இருக்கிறது என்றும்; ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து தானும் கம்பேக் செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். இதனால் நெல்சனும் ஹேப்பி அண்ணாச்சிதான்.

வசூல்: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலே படக்குழுவுக்கு திருப்தியைத்தான் தந்தது. அடுத்தடுத்து நாட்களில் படம் நல்லபடியாகவே வசூல் செய்துவந்தது. வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக வசூலில் டல்லடித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் கூறுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார்: வசூலில் இப்போது டல்லடித்தாலும் இதுவரை செய்த வசூலே படத்தை மெகா ஹிட்டாக்கிவிட்டது. எனவே படக்குழுவுக்கு ரஜினி என்ன பரிசளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. சமீபத்தில் நெல்சன் திலீப்குமார், ரெடின் கிங்ஸ்லீ, ஜாஃபர் கலந்துகொண்ட பேட்டியில் நெல்சனிடம் கிங்ஸ்லீ வீட்டுக்கு வெளியே ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்பதாக கேள்விப்பட்டேன் என கலாய்த்திருந்தார்.

A leather Wallet is a Gift to those who have worked in Jailer

கார் இல்லை பர்ஸ்தான்: இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் ஆளுக்கொரு பர்ஸை பரிசளிக்க ரஜினிகாந்த்தும், லதாவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பர்ஸ் லெதர் பர்ஸாகவும், அதில் ஜெயிலர் என்று பெயர் பொறித்திருக்கும் என்றும் தெரிகிறது. இதற்கான ஆர்டரை கோப்லா நிறுவனத்திடம் லதா கொடுத்திருக்கிறாராம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவர் அந்த லெதர் பர்ஸ் ஃபோட்டோவை தனது முகநூலில் பதிவு செய்து இது தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

என்ன தலைவரே இப்படி?: இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்காக அந்தப் படத்தின் இயக்குநருக்கு காரை பரிசாக அளித்தார் கமல் ஹாசன். ஆனால் நீங்கள் என்ன தலைவரே லெதர் பர்ஸை கிஃப்ட்டாக கொடுக்கிறீர்கள். இதை கொடுப்பதற்கு கொடுக்காமலேயே இருக்கலாம் என கலாய்க்கின்றனர். அதேசமயம் இது லதா தனிப்பட்ட முறையில் கொடுப்பது. கண்டிப்பாக ரஜினிகாந்த் வேறு ஏதேனும் பெருசாக கொடுப்பார். ஏனெனில் அவர் அண்ணாத்த படத்துக்கே தங்க சங்கிலி பரிசளித்தவர் என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X