twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 நாட்களில் இரண்டரை கோடி பேர் பார்த்த கடம்பன்... நமக்கு சொல்வது என்ன?

    |

    Recommended Video

    கேட்டது கிடைத்துவிட்டது,: துள்ளிக் குதிக்கும் ஜூலி- வீடியோ

    "சினிமாவை தியேட்டர்களில் மட்டும்தான் ரிலீஸ் செய்வேன். பார்க்க விரும்புபவர்கள் வந்துதான் பார்க்க வேண்டும். உங்கள் இடத்துக்கு நான் கொண்டு வந்து காண்பிக்க மாட்டேன்," என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

    இந்த பிடிவாதம்தான் பைரஸியால் சினிமா அழிய முக்கியக் காரணம். இன்று தியேட்டரைப் போன்ற அனுபவத்துடன் படம் பார்க்க பல வசதிகள் வந்துவிட்டன. எனவே வீட்டிலேயே பார்க்கும் வசதியை அவர்களுக்கு ஏற்படுத்தி தந்தால் அவர்கள் ஏன் பைரஸியில் படம் பார்க்க போகிறார்கள்?

    A lesson from Kadamban youtube release

    கடந்த ஆண்டு ஆர்யா, கேதரீன் தெரசா நடிப்பில் ஏப்ரல் 14 அன்று வெளியான படம் கடம்பன். பவர் பாண்டி, சிவலிங்கா படங்களுக்கு இடையில் வந்ததாலும் ரசிகர்கள் வரவேற்பை பெறாததாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

    இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷன் 15 நாட்களுக்கு முன்பு யூட்யுபில் வெளியானது. இந்த 15 நாட்களில் 2.67 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். கடம்பன் மட்டுமல்ல தமிழில் வெளியாகி படுதோல்வியடைந்த படங்கள் கூட ஹிந்தி பதிப்பு யூட்யூபில் வெளியானால் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை ஈட்டுகின்றன. ஆனால் நமது தமிழ் படங்களை குறிப்பிட்ட காலத்துக்கு பின்னும் கூட யூட்யூபில் வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அதுவும் பைரஸியில் திருட்டுத்தனமாகத்தான் வெளியாகிறது.

    எனவே இதை ஒரு நல்ல மீடியமாக எடுத்துக்கொண்டு தமிழ் சினிமாக்காரர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் வருமானம் ஈட்டலாம்.

    English summary
    Tamil Cinema industry must need to concentrate in other medium release apart from theatrical release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X