கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு கேரளாவில் வேலை இல்லை.. சஞ்சு சாம்சன் செய்த செயலுக்கு ரசிகர்கள் புகழாரம்!

சென்னை: கேரளா ஸ்டோரி படத்தின் இரண்டாவது பாகம் கடந்த 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு படத்தின் புரோமோசன் வேலைகள் நடைபெற்று வந்தது. இப்படி இருக்கையில் இந்த படம் உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று கூறிக் கொண்டு, உண்மைக்கு புறம்பான, கேரளா குறித்த அடிப்படை புரிதலற்ற வகையில் படமாக்கி உள்ளனர். கேரளாவில் அனைத்து மத மக்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் உள்ளனர். அப்படி இருக்கும் போது, இதுபோன்ற விஷமப் பிரச்சார படங்களை கேரளாவில் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் படத்தை முழுவதுமாக பார்த்தது. அதற்கு முன்னர் படக்குழு தரப்பில் படத்தின் பெயர் தான் கேரளா ஸ்டோரி, ஆனால் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களைத்தான் நாங்கள் படமாக எடுத்துள்ளோம் என்று வாதிடப்பட்டது. இதற்கிடையில் படத்தின் டிரைலர் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக பொய் செய்திகள் இணையத்தில் பரவியது. அதற்கு படக்குழு தரப்பில் நாங்கள் கேரளா ஸ்டோரி படத்தின் டிரைலரை யூடியூப் தளத்தில் இருந்து நீக்கவில்லை என்றும் அறிவிப்பு வெளியிட்டது.

A Lesson in Unity Sanju Samson s Celebration Counters The Kerala Story 2 Narrative

இப்படி இருக்கையில் டி20 உலக கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் குரூப் 8 சுற்றில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெறச் செய்து அரை இறுதிக்கு தகுதி பெற வைத்தார். இவர் மொத்தம் 50 பந்துகளை எதிர் கொண்டு, 14 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் விளாசி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

சஞ்சு சாம்சன் செலிபிரேஷன்: இந்திய அணிக்கான வின்னிங் ஷாட்டை அடித்து முடித்ததும், மைதானத்திலேயே அல்லா, ஏசு மற்றும் இந்து கடவுள்களை வணங்குவது போல, வணங்கி, அணியின் வெற்றியை கொண்டாடினார். இவரது இந்த கொண்டாட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், இது தொடர்பாக சினிமா ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

A Lesson in Unity Sanju Samson s Celebration Counters The Kerala Story 2 Narrative

ரசிகர்கள் போஸ்ட்: அதாவது கேரளா ஸ்டோரி 2 போன்ற பிரச்சார நெடி உள்ள, விஷமத்தனமான கருத்துக்களை பரப்பும் படத்திற்கு கேரளம் போன்ற சகோதரத்துவ, கடவுளின் சொந்த மாநிலத்தில் இடம் இல்லை என்று தெரிவித்தது போல இருந்தது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X