பிக்பாஸில் பங்கேற்க போகும் இதுவரை கன்ஃபார்மான 10 பிரபலங்கள் இவர்கள்தான்.. தெறிக்கவிடும் பட்டியல்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்களிர் இதுவரை கன்ஃபார்மானவர்கள் என 10 பிரபலங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

Recommended Video

Bigg Boss முதல் சீசனில் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட பிரபலங்கள் #KonjamFlashback

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதுதொடர்பான செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக போட்டியாளர்கள் யார் என்பது குறித்த செய்திகள் தினம் ஒன்றாய் தீயாய் பரவி வருகிறது.

றெக்கை கட்டி பறக்கிறது

றெக்கை கட்டி பறக்கிறது

நாளை மறுநாள் முதல் பிக்பாஸ்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் கட்டாய குவாரண்டைனில் வைக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் றெக்கை கட்டி பறக்கிறது. சில போட்டியாளர்கள் தங்களின் பெயர் பிக்பாஸில் அடிபடுவதை பார்த்து நாங்கள் பங்கேற்க போவதில்லை என விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

சிலர் நடப்பது நடக்கட்டும் என அமைதி காத்து வருகின்றனர். சில பிரபலங்கள் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் குழப்பி வருகின்றனர். இதனால் யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள் என்று தெரியாமல் ரசிகர்களும் குழம்பி வருகின்றனர்.

தீயாய் பரவும் லிஸ்ட்

தீயாய் பரவும் லிஸ்ட்

மேலும் பெயர் அடிபடும் பிரபலங்களிடமெல்லாம் நீங்கள் பிக்பாஸில் பங்கேற்க போகிறீர்களா அது உண்மையா என்று சமூக வலைதளங்களிலும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்களில் இதுவரை உறுதி செய்யப்பட்டவர்கள் என ஒரு பட்டியல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

அந்தப் பட்டியலில் முதலில் இருப்பது சனம் ஷெட்டி. சனம் ஷெட்டி பிரபல மாடலாகவும் நடிகையாகவும் உள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. இவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷனின் முன்னாள் காதலி ஆவார்.

நடிகை கிரண்

நடிகை கிரண்

அடுத்து நடிகை கிரண் ரத்தோட்.. இவர் விக்ரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமலின் அன்பே சிவம் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் கிரண், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு

அடுத்து நடிகை ஷாலு ஷம்மு. பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வரும் ஷாலு ஷம்மு பல படங்களில் ஹீரோயின்களுக்கு தோழியாக நடித்துள்ளார். சோஷியல் மீடியாவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

ரியோ ராஜ்

ரியோ ராஜ்

அடுத்து பிரபல விஜேவும் நடிகருமான ரியோ ராஜூம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்களில் கன்ஃபார்மானதாக கூறப்படுகிறது. எப்போதும் கேலி கிண்டல் என இருக்கும் ரியோ ராஜ், பிக்பாஸ் வீட்டிலும் கலகலப்பை கூட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமுதவாணன்

அமுதவாணன்

அடுத்த விஜய் டிவி புராடெக்ட்டான அமுதவாணன். தமிழ் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டான அமுதவாணன், ஜோடி நம்பர் ஒன், கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பெரும் பிரபலமானவர். இவர் கடந்த சீசனில் பங்கேற்ற சாண்டியின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்ரிதா அய்யர்

அம்ரிதா அய்யர்

அடுத்து அம்ரிதா அய்யர்.. பிகில் படத்தின் மூலம் பிரபலமானவர் அம்ரிதா. ஆரம்பம் முதலே இவரது பெயர் பிக்பாஸில் அடிப்பட்டது. ஆனால் முதலில் மறுத்த அவர், பின்னர் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்றார். இந்நிலையில் அவரது பெயரும் உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

அடுத்து ஷிவானி நாராயணன்.. சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன்.. லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் கலக்கல் போட்டோக்களை ஷேர் செய்து வரும் ஷிவானியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

புகழ்

புகழ்

அடுத்து குக் வித் கோமாளி நட்சத்திரமான புகழின் பெயரும் இந்த பிக்பாஸ் சீசனில் அடிபட்டு வந்தது. அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் என்டெர்டெய்ன்மென்ட் கேரண்டி என்று கூறப்பட்ட நிலையில் அவரது பெரும் உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது.

ஆர்ஜே வினோத்

ஆர்ஜே வினோத்

அடுத்து ஆர்ஜே வினோத்.. ஆர்ஜே வினோத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது கன்ஃபார்மானதாக கூறப்படுகிறது. அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், அவர் கேரியரில் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

அடுத்து பாலாஜி முருகதாஸ்.. பிரபல மாடலான பாலாஜி முருகதாஸின் பெயரும் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்க போகும் பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பாலாஜி முருகதாஸ் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா என பல பட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இன்னும் கன்ஃபார்ம் ஆகல

இன்னும் கன்ஃபார்ம் ஆகல

இவர்கள் மட்டுமின்றி நடிகை லக்ஷ்மி மேனன், விஜேவும் நடிகருமான ரக்ஷன், சூர்யா தேவி உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்களின் பெயரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் என பரவி வருகிறது. ஆனால் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X