சுஷாந்த் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன.. ஆம்புலன்ஸில் சென்ற நபர் பகீர்.. கதறும் சகோதரி!

சென்னை: சுஷாந்தின் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாக அவரது உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸில் சென்ற நபர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Sushant Singh case Complications • Final Details

நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது மரணம் குறித்து நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சுஷாந்த் உடலுடன் ஆம்புலன்ஸில் சென்ற நபர் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடல் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய தினமே மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

உடம்பில் காயங்கள் இருந்தன

உடம்பில் காயங்கள் இருந்தன

இந்நிலையில் தன்னுடைய பெயரை குறிப்பிட விரும்பாத அந்த நபர், பிரேத பரிசோதனை பற்றி தனக்கு எல்லாம் தெரியும் என்றும், மேலும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உடலில் பல மார்க்குகள் இருந்ததாகவும் கூறினார். சுஷாந்தின் உடல் கூப்பர் மருத்துவமனையில் இருந்து பத்து நிமிட தூரத்தில் உள்ள ஜுஹூ மயானத்தில் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட போது ஆம்புலன்ஸில் தானும் சென்றதாக கூறியுள்ளார்.

கைது செய்யுங்கள்

கைது செய்யுங்கள்

அவரது இந்த நேர்க்காணலை சுஷாந்தின் சகோதரியான ஸ்வேதா சிங் கிரித்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் "என் கடவுளே !! இது போன்ற செய்திகளைக் கேட்பது என் இதயத்தை ஒரு மில்லியன் முறை உடைக்கிறது... அவர்கள் என் சகோதரரை என்ன செய்தார்கள். தயவுசெய்து அவர்களை கைது செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எதுவும் தெரிகிறது

எதுவும் தெரிகிறது

இதனிடையே இந்தியா டுடே ஊடகத்திற்கு அந்த நபர் அளித்த பேட்டியில், எந்த ஆம்புலன்சிலும் வேலை செய்யவில்லை என்றும் கூப்பர் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை என்றும் கூறினார். அவர் ஒரு பிரேத பரிசோதனை நிபுணரா என்று கேட்டபோது, பிரேத பரிசோதனை என்றால் என்ன அல்லது அது எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவரது கல்வி தகுதி 10 வது தேர்ச்சி என்றும் கூறினார்.

தகன மயானத்திற்கு..

தகன மயானத்திற்கு..

மேலும் தான் கூப்பர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைக்குள், மருத்துவமனையின் ஆண் ஆயாம்மா என்று கூறி சென்றதாகவும், மேலும் ஜூஹூவில் உள்ள தகன மயானத்திற்கு சென்றதாகவும் கூறினார். அப்போது சுஷாந்தின் உடல் ஏகப்பட்ட காயங்கள் இருந்தன என்றும் அவர் கூறினார்.

பிரபலங்களின் இறுதிச்சடங்கு

பிரபலங்களின் இறுதிச்சடங்கு

பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பார்த்ததாக கூறினார். மேலும் பிரேத பரிசோதனை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், பிரபலங்களின் இறுதிச் சடங்கிற்கு செல்வது தனக்கு பிடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X