"அடுத்தவாரம் அனிதா சம்பத் போவாரா எப்படி?" பிரச்சாரத்தில் கேட்ட குரல்.. ஆடிப்போன கமல்.. பகீர் வீடியோ!

சென்னை: திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசனிடம் அனிதா சம்பத் குறித்து கேட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் இப்போதே தீயாய் வேலை செய்ய தொடங்கி விட்டார்.

சூறாவளி பிரச்சாரம்

சூறாவளி பிரச்சாரம்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும், அரசியல் தொடர்பான பணிகளில் தீவிரமாய் உள்ளார். சென்னை பூந்தமல்லி, காஞ்சிபுரம், தேனி, விருது நகர் என பல இடங்களில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அனிதா போய் விடுவாரா?

அனிதா போய் விடுவாரா?

செல்லும் இடங்களில் எல்லாம் அளுங்கட்சியை கிழித்து தொங்கவிட்டு வருகிறார். கமலின் பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் அண்மையில் கமல் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பப்ளிக் ஒருவர் அடுத்த வாரம் அனிதா சம்பத் போய்விடுவாரா என்று கேட்டுள்ளார்.

ஆடிப்போன கமல்

ஆடிப்போன கமல்

அத்தனை மக்கள் திரண்டிருந்த போதும் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் பொது மக்களில் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனிதா சம்பத் குறித்து கேட்டது தெளிவாக கேட்கிறது. இதனை எதிர்பாராத கமல் ஒரு நொடி ஆடியே போய்விட்டார்.

வைரலாகும் வீடியோ

அனிதா சம்பத் குறித்து கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் ஆசையில் தீயாய் வேலை செய்து வரும் கமலிடம் செல்லும் இடத்தில் எல்லாம் பிக்பாஸ் குறித்து கேட்பது சற்று நெருடலாகதான் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில்

பிக்பாஸ் வீட்டில்

கடந்த திங்கள் கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க்கின் போது அனிதாவை ஆரி டீமோட்டிவேட்டட் என்றார். இதற்காக அவர் சொன்ன சில விஷயங்களை மேற்கோள் காட்டினார்.
அதாவது, அனிதா அர்ச்சனா மேல் படுத்து அழுது நான், என் வீட்டுக்கு போக வேண்டும், என் வீட்டு ஞாபகம் வந்துடுச்சு என்றார்.

குடும்பத்த பத்தி பேசாதீங்க

குடும்பத்த பத்தி பேசாதீங்க

அவர் பலமுறை அவரது அப்பா அம்மா மற்றும் பிரபா குறித்து கூறியிருக்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே குறுக்கிட்ட அனிதா, என் குடும்பத்தபத்தி பேசாதீங்க. என் அப்பா அம்மா பிரபாவ பத்தி இங்க பேசாதீங்க என்று கத்தினார்.

சொல்வதை கேளுங்கள்

சொல்வதை கேளுங்கள்

தொடர்ந்து என் குடும்பத்தை பத்தி பேசாதீங்க, குடும்பத்தை பத்தி பேசாதீங்க என்று திருப்பி திருப்பி அதையே கூறினார். ஆரி தனது குடும்பத்தை பற்றி தவறாக பேசுவதை போன்று காட்ட முயற்சித்தார். அதற்கு பதில் சொன்ன ஆரி, நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே தெரியாமல் பேச வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்றார்.

உதட்டைக் கடித்து

உதட்டைக் கடித்து

அதற்கு நீங்கள் சொல்லி முடிக்கும் வரை வெயிட் பண்ண முடியாது என்ற அனிதா அவரு என் புருஷன், என் புருஷன பத்தி நீங்க பேசக்கூடாது என ஆரியை தவறாக காட்ட முயற்சித்தார். நீங்கள் பேசியதைதான் நான் சொல்கிறேன் தவறாக எதையும் சொல்லவில்லை என்று ஆரி மன்றாடியும், பேசாதீங்க பேசாதீங்க ஆரி என கையை நீட்டி விரலை ஆட்டியும் முறைத்தும் உதட்டைக் கடித்தும் ருத்ரதாண்டவம் ஆடினார் அனிதா.

ஓட்டே போட போவதில்லை

ஓட்டே போட போவதில்லை

இதனை பார்த்த ரசிகர்கள் அப்போது முதலே அனிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த வாரம் அனிதாவை கமல் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அவருக்கு ஓட்டே போட போவதில்லை என்றும் கூறி வருகின்றனர். அந்த கோபத்தில் தான் இந்த நபர் அடுத்த வாரம் அனிதா வெளியே போவாரா என்று கேட்டிருப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X