»   »  பிரபல நடிகையின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த காமுகன்

பிரபல நடிகையின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த காமுகன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தான் கல்லூரியில் படித்தபோது ரயிலில் ஆண் ஒருவர் தனது கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்ததாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை வித்யா பாலன் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வித்தியாசமான மற்றும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்கிறார்.

இந்நிலையில் அவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று பற்றி கூறியதாவது,

ரயில் பெட்டி

ரயில் பெட்டி

நான் கல்லூரியில் படித்தபோது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. கல்லூரி முடிந்து ரயிலில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நான் பயணம் செய்தது பெண்கள் பயணிக்கும் பெட்டி.

அநாகரீகம்

அநாகரீகம்

பெண்கள் பெட்டியில் ஒரு ஆண் ஏறினார். இது பெண்கள் பெட்டி என்று கூறியதற்கு தெரியாமல் ஏறிவிட்டேன் அடுத்த ஸ்டேஷனில் மாறிக் கொள்கிறேன் என்றார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பெண்கள் பெட்டியின் வாசலில் நின்ற அந்த ஆள் திடீர் என்று பேண்ட் ஜிப்பை திறந்து சுயஇன்பம் அனுபவித்தார். இதை பார்த்த நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம்.

ரயில் நிலையம்

ரயில் நிலையம்

அந்த நபர் செய்த அசிங்கத்தை பார்த்து எனக்கு கோபம் வந்தது. உடனே என் கையில் இருந்த புத்தகத்தை வைத்து அவரை அடித்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டேன். ரயில் ஸ்டேஷனுக்கு வந்ததால் அவர் அன்று சாகவில்லை என்றார் வித்யா பாலன்.

English summary
Bollywood actress Vidya Balan said a man masturbated in front of her and other women in ladies compartment of a train.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil