என்னுடன் படம் பார்க்கும்போது 'இதை மறந்துடாதே': காதலிக்கு கன்டிஷன் போட்ட காதலர்
சென்னை: அவெஞ்சர்ஸ் படம் பார்க்கும்போது என்னவெல்லாம் செய்யணும், செய்யக்கூடாது என்று காதலர் ஒருவர் தனது காதலிக்கு பெரிய பட்டியலே போட்டுள்ளார்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அவெஞ்சர்ஸ் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு முறை பார்த்தது போதவில்லை என்று மீண்டும் மீண்டும் பார்க்கும் திட்டத்தில் பலர் உள்ளனர்.
இந்நிலையில் காதலர் ஒருவர் அவெஞ்சர்ஸ் படம் பார்க்க செல்லும் முன்பு காதலிக்கு பெரிய மெசேஜ் அனுப்பியுள்ளார். அதை அவர் ட்விட்டரில் வெளியிட அதற்கு காதலி பதிலும் அளித்துள்ளார். அந்த மெசேஜில் காதலர் கூறியிருப்பதாவது,

தண்ணீர்
நாளை என்னுடன் அவெஞ்சர்ஸ் படம் பார்க்க வரும்போது இதை எல்லாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பாப்கார்ன் வாங்க வரிசையில் நிற்கப் போவது இல்லை. தயவு செய்து முன்னேற்பாடு செய்யவும். படம் ஓடும் போது(என்ட் கார்டு போடுவதையும் சேர்த்து) நீ எதையும் சாப்பிட அனுமதி இல்லை. சத்தமில்லாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம்
நீ கழிப்பறைக்கு செல்ல நான் நகர மாட்டேன். நீ வேறு வழியை பார்த்துக் கொள். நீ ட்ரெய்லர்கள் அல்லது படம் ஓடும் போது(என்ட் கார்டு போடுவதையும் சேர்த்து) என்னுடன் நீ பேசக் கூடாது. நம் மகன் தொடர்பாக ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் நீ தாராளமாக கிளம்பிச் செல்லலாம். நான் படம் முடிந்த பிறகு வருவேன்.
அமைதி
படம் முடிந்த பிறகு(என்ட் கார்டு போடுவதையும் சேர்த்து) நிகழ்வுகள் குறித்து 30 நிமிடம் பேசலாம். அதன் பிறகு அவரவர் அமைதியாக இருந்து படத்தை பற்றி நினைக்கலாம். படம் பார்த்த பிறகு நான் வழக்கமாக இருப்பது போன்று இருக்க மாட்டேன். அதனால் அதை பார்த்து பயப்பட வேண்டாம். உன் ஒத்துழைப்புக்கு நன்றி. சந்தோஷமாக படம் பார்ப்பதை எதிர்பார்க்கிறேன் என்று அந்த காதலர் தெரிவித்துள்ளார்.
நியாயம்
காதலர் போட்ட கன்டிஷன்கள் நியாயமானதே என்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











