தம்பி அருள் நிதியுடன் கை கோர்க்கும்.. அண்ணன் உதயநிதி.. அதிரடி பிராஜக்ட்.. டைரக்டர் யார் தெரியுமா?
சென்னை : உதயநிதி ஸ்டாலின் சிறப்பான படத்தேர்வுகளை சமீபத்தில் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது டைரக்டர் பாலா இயக்கம் மற்றும் தயாரிப்பில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவருடன் முதல்முறையாக இணையவுள்ள சிறப்பான நடிகர் குறித்தும் தற்போது விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதர்வா, ஜிவியுடன் உதயநிதி
அரசியலிலும் சினிமாவிலும் சிறப்பாக செய்லபட்டு வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்ட்டிகல் 15 ரீமேக் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். மேலும் பாலா இயக்கத்தில் உதயநிதி அதர்வா மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

பாலாவின் புதிய கதை
இந்நிலையில் தற்போது இந்த ப்ராஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எப்போது உயிர்ப்பான கான்செப்ட்களில் கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கிவரும் இயக்குநர் பாலா தற்போது புதிய கதையை கையில் எடுத்துள்ளார். இந்த கதையிலும் உதயநிதி ஸ்டாலின் லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முதல்முறையாக இணைகின்றனர்
ஆனால் இவருடன் இணைகிறார் அருள்நிதி. இவர்கள் இருவரும் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். துவக்கத்தில் இருந்தே தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் கவனமாக செயல்பட்டு வருபவர் அருள்நிதி. அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்து விடுகின்றன.

மிகுந்த எதிர்பார்ப்பு
இந்நிலையில் இவர்கள் இருவரும் இணையும் புதிய படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை விரைவில் பாலா வெளியிடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் தனது சொந்த தயாரிப்பில் இந்த படம் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











