லியோவும், ரோலக்ஸும் என்னோட அப்ரசண்டிகள்.. ட்ரெண்டாகும் நேசமணி போஸ்டர்

சென்னை: லியோ விஜய் குறித்தும், ரோலக்ஸ் சூர்யா குறித்தும் நேசமணி வடிவேலு பேசுவது போன்ற போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

வாரிசு படத்துக்கு பிறகு விஜய் லியோ படத்தில் நடித்துவருகிறார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். மாஸ்டர் படத்துக்கு பிறகு இரண்டு பேரும் மீண்டும் இணைந்திருப்பதால் இந்தப் படமும் ஹிட்டாகும் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

 லியோ ப்ளடி ஸ்வீட்

லியோ ப்ளடி ஸ்வீட்

வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் லியோ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டுமென்பதில் விஜய் முனைப்போடு இருக்கிறார். லியோ படம் கேங்ஸ்டர் பாணியில் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்காக தற்போது படக்குழு காஷ்மீரில் முகாமிட்டிருக்கிறது. விக்ரம் படம் போலவே இந்தப் படத்துக்கும் ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் நிச்சயம் பெரியளவில் பேசப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இந்தியாவின் முக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இந்தியாவின் முக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கிய பிறகு லோகேஷ் கனகராஜ் இந்தியாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகிவிட்டார். ஏனெனில் அந்தப் படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. வெறும் வசூலை வைத்து மட்டும் லோகேஷ் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக மாறவில்லை. அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்தப் படத்தில் லோகேஷ் கனகராஜின் திரைக்கதை.

லோகேஷ் சினிமா யுனிவெர்ஸ்

லோகேஷ் சினிமா யுனிவெர்ஸ்

ஹாலிவுட்டில் எப்படி சினிமா யுனிவெர்ஸ் என்ற ஒன்று உருவாகியிருக்கிறதோ அதேபோன்ற ஒன்றை விக்ரம் படம் மூலம் தமிழிலும் உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தில் கைதி படத்தின் கதாபாத்திரங்களையும், பழைய விக்ரம் படத்தையும் இணைத்து ஒரு மேஜிக் செய்திருந்தார். அதனால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் லோகேஷ் பக்கம் திரும்பியது.

மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம்

மிரட்டிய ரோலக்ஸ் கதாபாத்திரம்

அதேபோல், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தையும் உருவாக்கியிருந்தார் லோகேஷ். அந்தக் கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில நிமிடங்களே படத்தில் அந்தக் கதாபாத்திரம் வந்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரம்தான் மையமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் கைதியில் வரும் கதாபாத்திரங்களும், விக்ரமில் வரும் கதாபாத்திரங்களும் ரோலக்ஸுடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கும்.

எனவே லோகேஷ் கனகராஜ் தற்போது இயக்கும் லியோ படமும் லோகேஷ் கனகராஜின் சினிமா யுனிவெர்ஸில் கனெக்ட் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. முக்கியமாக ரோலக்ஸ் கதாபாத்திரம் லியோவில் வருமா என்று பலர் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

 நேசமணியின் அப்ரசண்டிகள்தான் லியோ, ரோலக்ஸ்

நேசமணியின் அப்ரசண்டிகள்தான் லியோ, ரோலக்ஸ்

இஇந்நிலையில் இணையத்தில் மீம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. நேசமணியை வைத்து (வடிவேலு) உருவாக்கப்பட்டிருக்கும் அந்த மீமில், "லியோவும், ரோலக்ஸும் ஒரு காலத்தில் எனட்ட அப்ரசண்டிகளா இருந்து தொழில் கத்துக்குட்ட பசங்கதான். வரலாறு இப்படி இருக்கும்போது எனட்டயே வந்து டான் ஆகிட்டான், ரவுடி ஆகிட்டான்னு சொல்றதா" என கேட்பது போல் இருக்கிறது. தற்போது இந்த மீம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

முன்னதாக சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்ட மூவரும் நடித்த படம் ஃப்ரண்ட்ஸ். அந்தப் படத்தில் வடிவேலுவிடம் விஜய்யும், சூர்யாவும் பணியாள்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X