தங்கத்தின் மோகத்தை கதைக் களமாகக் கொண்டு வரும் வெண்ணிலா வீடு!

By Shankar

தங்கத்தின் மோமகம், கிராம மக்கள் நகர்ப்புறத்துக்கு வரும் சூழல் போன்றவற்றைக் கதைக் களமாகக் கொண்டு ஒரு படம் உருவாகியுள்ளது. தலைப்பு - வெண்ணிலா வீடு.

இயக்குநர் அகத்தியனின் மகளும் ஹீரோயினுமான விஜயலட்சுமி இதில் நாயகியாக நடிக்கிறார்.

இந்தப் படம் தனக்கு பெரிய திருப்பத்தைத் தரும் என நம்புகிறார் விஜயலட்சுமி.

ஆதர்ஷ் ஸ்டுடியோஸ் சார்பில் பிவி அருண் தயாரிக்கும் இப்படத்தை, அரும்பு மீசை குறும்புப் பார்வை படத்தை இயக்கிய வெற்றிவீரன், தன் பெயரை வெற்றி மகாலிங்கம் என்று மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தங்கத்தின் மீதான மோகம்

தங்கத்தின் மீதான மோகம்

தங்கத்தின் மீதான மக்களின் மோகத்தைக் கதைக் களமாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார் வெற்றி மகாலிங்கம். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் மக்களின் வாழ்க்கையையும் இதில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம்.

தன்ராஜ் மாணிக்கம்

தன்ராஜ் மாணிக்கம்

தன்ராஜ் மாணிக்கம் என்ற புதிய இசையமைப்பாளரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளனர். நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்து அடையாளம் காணப்பட்ட திறமையாளர்களுள் இவரும் ஒருவர். பாடல்கள் சிறப்பாக அமைந்திருப்பதைக் கேள்விப்பட்டு, தன் படத்துக்கும் இவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.

கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து

இந்தப் படத்தின் முழுப் பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். மகனின் பாடல்களைக் கேட்ட வைரமுத்து, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா ரேஞ்சுக்கு இந்தப் பாடல்கள் அமையும் என்று வாழ்த்தியுள்ளார்.

விஜயலட்சுமி - செந்தில்

விஜயலட்சுமி - செந்தில்

இந்தப் படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். நாயகியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் விஜயலட்சுமி. வனயுத்தம் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது. சிஎஸ் அமுதனின் இரண்டாவது படம் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

திருப்பு முனை

திருப்பு முனை

வெண்ணிலா வீடு படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது விஜயலட்சுமி கூறுகையில், "எனக்கு இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை உள்ளது. எனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும். இதன் படப்பிடிப்புக்குச் சென்றதே தனி அனுபவம். ஏதோ பாட்டி வீட்டுக்குப் போகும் பள்ளிக் குழந்தையின் சந்தோஷத்தை உணர்ந்தேன்," என்றார்.

இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று வியாழக்கிழமை காலை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இசை குறுந்தகடை பெப்சி தலைவர் இயக்குநர் அமீர் வெளியிட, இயக்குநர் சேரன் பெற்றுக் கொண்டார். ட்ரைலரை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட, இயக்குநர் பாலாஜி சக்திவேல் பெற்றுக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X