twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் படத்தையும் பாருங்க: தியேட்டர் வாசலில் கெஞ்சிக் கெஞ்சி டிக்கெட் விற்ற தயாரிப்பாளர்

    By Siva
    |

    Recommended Video

    ஒரு படத்தின் தயாரிப்பாளர் தியேட்டர் வாசலில் கூவிக் கூவி டிக்கெட் விற்ற அவலம்- வீடியோ

    சென்னை: விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் சிறு படங்களை கண்டுகொள்ளாததால் ஒரு படத்தின் தயாரிப்பாளர் தியேட்டர் வாசலில் கூவிக் கூவி டிக்கெட் விற்ற அவலம் நடந்துள்ளது.

    விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் சிறு படங்களை கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. யார் என்ன கூறினாலும் கேட்கப் போவது இல்லை என்ற ஒரு முடிவோடு விஷால் இருப்பதாக தயாரிப்பாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

    A movie producer sells ticket at the entrance of theatre

    இன்று விஷாலின் அயோக்யா படம் ரிலீஸாகவில்லை. ஜீவாவின் கீ மதியம் ரிலீஸானது. எங்கு சென்றாய் என் உயிரே, உண்மையின் வெளிச்சம், வேதமானவள், காதல் முன்னேற்றக் கழகம் ஆகிய படங்களும் இன்று வெளியாகின.

    வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்களே: ரஜினி வில்லனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் வாய் கூசாம இப்படி பொய் சொல்றீங்களே: ரஜினி வில்லனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

    இந்நிலையில் எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி. பாண்டி தியேட்டர் வாசலில் நின்று கொண்டு தன் படத்தை பார்க்க வாங்க என்று ரசிகர்களை அழைத்துள்ளார். தானே டிக்கெட் வாங்கி அதை குறைந்த விலைக்கு மக்களிடம் கொடுத்து படத்தை பார்க்க வைத்துள்ளார் பாண்டி.

    மேலும் படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் விலையுடன் 100 ரூபாய் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சிறு படங்களுக்கும் தயவு செய்து ஆதரவளியுங்கள் என்று பாண்டி ரசிகர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ஒரு படத்தின் தயாரிப்பாளர் இப்படி தியேட்டர் வாசலில் நின்று கெஞ்சியதை பார்த்து ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.

    English summary
    A small budget movie producer sells tickets at the entrance of a theatre requesting fans to support his movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X