அடலசென்ஸ் வயதில் வரும் மயக்கமே மாயநதி
Recommended Video
மாயநதி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ஒரு புது வித்தியாசமான அனுபவத்திற்காக இந்த படத்தை அனைவரும் காணலாம்.
அபி சரவணன் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அவருக்கு ஜோடியாக வெண்பா நடித்துள்ளார்.
இவர்களுடன் ஆடுகளம் நரேன் மற்றும் அப்புக்குட்டி ,போன்ற பிரபலங்கள் நடித்த இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஒருவரே அசோக் தியாகராஜன். இவர் ஒரு டாக்டர் ஆனால் இவரது கனவு சினிமாவை இயக்குவது அதனால் அந்த கனவை இதில் நிறைவேற்றி விட்டார்.
அபி சரவணன் மற்றும் வெண்பா ஆகியோர் இதற்கு முன் பல படங்களில் நடித்துள்ளனர்.
அபி சரவணன் குட்டிப் புலி மற்றும் டுரிங் டாக்கிஸ் போன்ற படங்களிலும் வெண்பா கற்றது தமிழ் என்ற படத்தில் சிறு வயது அஞ்சலியாக வருவார்.

இப்படத்தை பார்பதற்கு மற்றுமொரு காரணம் ராஜ பவதாரணி இசை தான்.இசை குடும்பத்தில் இருந்து வந்த ஒரு இசை வாரிசு.யுகபாரதி வரிகளில் பாடல்கள் அனைத்தும் ஹிட் மற்றும் படத்தில் பின்னணி இசையும் சூப்பர்.

ஒரு அப்பா மகள் பாசம் நிறைந்த கதை மாயநதி. வெண்பா வின் நடிப்பிற்காக இப்படத்தை கண்டிப்பாக தியேட்டர்களில் சென்று பார்க்கலாம்.மற்றும் ஆடுகளம் அசுரன் போன்ற படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நரேன் இதில் அப்பா கதாபாத்திரத்தில் வருகிறார். அவரை வித்தியாசமாக ரசிக்க வைக்கிறது, அவரது அப்பா கதாபாத்திரம் என்றால் அது ஒரு தனி தான் .

ஒரு வித்தியாசமான கதை எடுத்து அதில் பல சமுக கருத்துகளை வைத்து படத்தை வழங்கி உள்ளார் இயக்குனர் அசோக் தியாகராஜன்.
மாயநதி கண்டிப்பாக வெற்றி அடையும் என்று பல பிரபலங்களால் சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications











