சிலை வழிபாடு செய்லாமா.. இஸ்லாமிய சட்டத்தை மீறிவிட்டார்.. ஷாருக்கான் மீது புகார்!
சென்னை: நடிகர் ஷாருக்கான் இஸ்லாமிய சட்டத்தை மீறிவிட்டார் என்று முஸ்லிம் அமைப்பு அவர் மீது புகார் அளித்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடித்த ஜவான் திரைப்படம் பான் இந்திய திரைப்படமான நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

திருப்பதியில் ஷாருக்கான்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஜவான் படம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ஷாருக்கான் கடந்த சில நாள்களுக்கு முன்பு வைஷ்ணுதேவி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து கடந்த 5ந் தேதி திருப்பதி கோவிலுக்கு தனது மகள் சுஹானா கான் மற்றும் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சென்றிருந்தார்.
Boycottjawan: மேலும், பட்டு வேட்டி சட்டையுடன் திருப்பதிக்கு வந்திருந்த ஷாருக்கான் அங்கு இருந்த கொடி மரத்தை வியத்து பார்த்து அதை வணங்கிய பின், ஏழுமலையானை தரிசனம் செய்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளான நிலையில், Boycottjawan என்கிற ஹாஷ்டாக் சோஷியல் மீடியாவில் டிரெண்டானது.
ஷாருக்கான் மீது புகார்: இந்நிலையில், சன்னி முஸ்லிமின் பிரதான அமைப்பான ராஸா அகாடமியின் தலைவர் செய்யத் நூரி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், இஸ்லாம் சிலை வழிபாட்டை அனுமதிப்பதில்லை. அதே போல, இஸ்லாம் மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர் அல்லாவின் முன்பு மட்டுமே தலை வணங்க வேண்டும். ஷாருக்கான் திருப்பதிக்குச் சென்று வந்ததால்,ஷாருக்கான் ஒரு நாத்திகராகவே தோன்றுகிறார். அவருக்கு மதம் ஒரு பொருட்டல்ல.
மனச்சாட்சிக்கு பதில் சொல்லுங்கள்: ஷாருக்கான் அடிப்படைக் கொள்கையை மீறி இருக்கிறார். ஆனாலும் நான் அவரை விமர்சிக்க மாட்டேன். ஒவ்வொருவரும் தங்களது மனச்சாட்சிக்கு நிச்சயம் பதில் அளித்த ஆக வேண்டும். நடிகர் ஷாருக்கான் மட்டுமல்லாது நடிகர் சல்மான் கானும் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது வீட்டில் விநாயகர் சிலையை எடுத்து வந்து வழிபடுவதை வழக்க வைத்து இருக்கிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











