என் நடிப்புக் கனவை வலுப்படுத்திய பெயர்.. 'தல' அஜித்தை தாறுமாறாகப் புகழும் பிரபல நடிகர்!

By

சென்னை: என் நடிப்பு கனவை வலுப்படுத்திய பெயர் அஜித் என்று பிரபல நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார்.

Recommended Video

V-CONNECT | ACTOR PRASANNA CHAT PART-02 | தல - தளபதிக்கு வில்லனா நடிக்கணும் | FILMIBEAT TAMIL

நடிகர் அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.

'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து இந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி

ஹூமா குரேஸி

மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

காமன் டிபி

காமன் டிபி

லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் சினிமாவுக்கு வந்து 28 வருடங்கள் ஆகிறது. அவர் அமராவதி படம் மூலம் ஹீரோ ஆனார். இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி 28 வருடங்கள் ஆனதை முன்னிட்டு அவர் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். இதற்கான காமன் டிபியை பல பிரபலங்கள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

பாம்புகள் மத்தியில்

பாம்புகள் மத்தியில்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் பிரசன்னா, பிரேம்ஜி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அந்தப் பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த காமன் டிபியில் பாம்புகள் மத்தியில் கம்பீரமாக நடிகர் அஜித் நிற்கிறார். தன்னம்பிக்கை சிகரம் என்று அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த டிபி வைரலானது.

கற்றுத்தந்த பெயர்

கற்றுத்தந்த பெயர்

இந்நிலையில் இந்த காமன் டிபியை வெளியிட்ட நடிகர் பிரசன்னா, அஜித்தை பாராட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: 'நடிகனாக வேண்டும் என்ற என் கனவை வலுப்படுத்திய ஒரு பெயர்; என்னை நானே உருவாக்கிக் கொள்ள கற்றுத்தந்த பெயர்; தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதைக் கடக்க தூண்டிய பெயர்; கடினமான காலங்களில் என்னைத் தாங்கிய பெயர், விட்டுவிடாத போராளியாக என்னை மாற்றும் பெயர்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X