விஜய்க்கு கூட ஓகே சொல்லல.. ஆனால் சசிகுமாருக்கு தலையாட்டிய இளம் ஹீரோயின்.. செம அப்டேட்!
நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் இளம் நடிகை ஒருவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் பிகில் படம் அடுத்த மாதம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படம் வேகமாக தயாராகி வருகிறது. அடுத்த வருடம் மே மாதத்திற்கு இந்த படம் குறி வைக்கப்பட்டுள்ளது.

யார்
இந்த படத்தில் பெரிய நடிகர்கள் பட்டாளம் நடிக்கிறது. இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா, மேலும் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஆனால் என்ன
முதலில் மாளவிகா மோகனன் வேடத்தில் நடிப்பதற்கு டிக்டாக் புகழ் மிருணாளினி பேசப்பட்டார். இதற்காக திரைப்பட குழு அவரிடம் பேசி வந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக மிருணாளினி இந்த படத்தில் நடிக்க முடியவில்லை.

மிருணாளினி எப்படி
இந்த நிலையில் தற்போது மிருணாளினி, நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் படத்திற்கு இன்று காலை பூஜை போடப்பட்டது. இதன் பட பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது.

இவர்தான்
இந்த படத்தில் ஹீரோயினாக தற்போது மிருணாளினி நடிக்கிறார். இவருக்கு இந்த படத்தில் மிக முக்கியமான ரோல் இருக்கிறதாம். அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











