என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். படத்திலிருந்து அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகின.
சிவகார்த்திகேயன் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். தேர்ந்தெடுக்கும் கதைகள் கமர்ஷியலாக இருப்பதால் சிறுவர், சிறுமிகள் மத்தியில் அவருக்கு நல்ல கிரேஸ் உண்டு. அதேபோல் குடும்பத்தினரும் சிவாவின் படங்களை விரும்பி பார்க்கின்றனர். விஜய்யும் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கவிருப்பதால் கண்டிப்பாக அவர் இடத்தை சிவகார்த்திகேயன் ரீப்ளேஸ் செய்வார் என்று எஸ்கே ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

அடுத்த படங்கள்: அயலான் படத்தின் வெற்றி அவரை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அதற்கு முன்னதாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
வசூல் வேட்டை: இந்த பொங்கல் ரேஸ் சிவகார்த்திகேயனுக்கு முக்கியமானதாகவே கருதப்பட்டது. ஏனெனில் அயலான் திரைப்படத்துக்கு போட்டியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. தனுஷால் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். எனவே இதில் தனுஷை சிவா வெல்வாரா என்று எதிர்பார்ப்பு எழுந்தது. எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன் வென்றுவிட்டார் என்றே பலரும் சொல்கிறார்கள். ஏனெனில் அயலான் திரைப்படத்தின் வசூல் 75 கோடி ரூபாயை தாண்டிவிட்டது.
எதிர்பார்ப்பில் அமரன்: அயலான் படத்துக்கு பிறகு அவரது நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் படத்தின் பெயர், டீசர், போஸ்டர்கள் என அப்டேட்டுகளாக குவிந்து ரசிகர்களை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்திய ராணுவ வீரர் முகுந்த வரதராஜனின் பயோபிக்காக இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அப்செட்டில் கமல் ஹாசன்: இந்நிலையில் அமரன் படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில் படத்தின் பட்ஜெட் போட்டதைவிட அதிகம் ஆகியிருப்பதாகவும் அதனால் படக்குழுவை அழைத்த கமல் ஹாசன்; விரைவில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். பட்ஜெட்டை பற்றி கவலை எதுவும் வேண்டாம் என்று சொன்னதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் தகவல்படி, படத்தை விநாயகர் சதுர்த்திக்கு திரைக்கு கொண்டு வர கமல் விரும்புகிறார்.
ஆனால் ஏற்கனவே படத்துக்கு ஒரு சர்ச்சை எழுந்தது. அதாவது இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக காண்பித்திருக்கிறார்கள் என்று ஏற்கனவே படத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுத்தன. தற்போது அதன் எதிரொலியாக படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்; படத்தை வாங்குவதற்கு யாரும் பெரிதாக முன்வரவில்லை; ஏனெனில் இந்தப் பிரச்னை பின்னால் விஸ்வரூபம் எடுக்குமோ என்று அஞ்சப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கமல் ஹாசனுக்கு புதிய தலை வலி வந்திருப்பதாக திரைத்துறையினர் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











