போடு தகிட தகிட.. பிக் பாஸ் சீசன் 6 வேறமாதிரி வரப்போகுது..24 மணி நேரமும் பார்க்கலாம்

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் முதல் வாரம் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இதில், முன்னாள் கவர்ச்சி நடிகை விசித்ரா, நடிகை வனிதா விஜய்குமாரின் முன்னாள் கணவர் ராபர்ட், சீரியல் நடிகை ரச்சிதா, யூடியூபரும் சமீபத்தில் நடிகை மகாலட்சுமியைத் திருமணம் செய்தவருமான ரவீந்தர் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்த கமல், பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சியிலிருந்து பாதியில் விலகினார். இதையடுத்து,பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை உறுதியானது.

சுவாரசியமே இல்லை

சுவாரசியமே இல்லை

கடந்த சீசனில் அறிமுகம் இல்லாத நபர்கள் கலந்து கொண்டதால் போட்டியாளர்கள் கலந்து கொண்டதால் நிகழ்ச்சியில் சுவாரசியமே இல்லை. இருப்பிலும் தாமரைச்செல்வி மற்றும் பிரியாங்காவால் ஓரளவுக்கு நிகழ்ச்சி வெற்றி பெற்றது. அதனால் இந்த முறை போட்டியாளர்கள் மிகவும் கவனமுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 9ந் தேதி

அக்டோபர் 9ந் தேதி

அந்த வகையில் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில்

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில்

இந்நிலையில், நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கமாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டும் இரவு 1 மணி நேரம் ஒளிப்பரப்பாகும். ஆனால் இந்த முறை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட முடியும். இந்த இனிப்பான செய்தியை கமல் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X