»   »  ”தெறிக்க விடலாமா பங்கு?”- இது ”தெறி” ரசிகர்கள் கிரியேஷன் இன்டர்வல் சீன்!

”தெறிக்க விடலாமா பங்கு?”- இது ”தெறி” ரசிகர்கள் கிரியேஷன் இன்டர்வல் சீன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜர் நடிக்கும் தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வந்தது. இப்படத்தின் போஸ்டர்கள் விஜய் ரசிகர்களை ஆரவராத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இன்டர்வெல் காட்சி இப்படித்தான் தான் இருக்கும் என ஒரு கதை சமூக வலைதளங்களில் சுற்றிச் சுழல்கின்றது.


அதில், "சமீபத்தில் தான் நடிகர் "விஜய்" நடிக்க அட்லி இயக்கும் தெறி படத்தின் இன்டர்வெல் காட்சி சென்னை சத்யம் சினிமாவில் படமாக்கபட்டதாம்.


வேதாளம் படமாம்:

வேதாளம் படமாம்:

அதில் வரும் ஒரு காட்சியில் விஜய் மற்றும் சமந்தா வேதாளம் படம் பார்ப்பது போலவும், அப்போது விஜய்க்கு ஒரு கால் வருகிறதாம்.


அஜித் கட் அவுட்டாம்:

அஜித் கட் அவுட்டாம்:

மறுமுனையில் வில்லன் விஜய்யை மிரட்ட விஜய் வெளியே கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் அஜித்தின் கட்-அவட் முன்பு நின்று வில்லனுக்கு சவால் விடும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாம்.


தெறிக்க விடலாமா?:

தெறிக்க விடலாமா?:

காட்சியில் விஜய்க்கும், அந்த வில்லனுக்கும் நடக்கும் உரையாடலில் வில்லன் தமிழ்நாடு போலீஸ்ல இருக்கற ஒருத்தனாலும் நான் இருக்குற இடத்த கண்டு பிடிக்க முடியாது. தேவையில்லாம என்னோட வேலைல நீ தலையிட்ட என்பதாகவும், உடனே விஜய் அதற்கு பங்கு தெறிக்கவிடலாமா என்று கேட்பதாக ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.


ஓத்துமையா இருங்கப்பா:

ஓத்துமையா இருங்கப்பா:

அனைவருக்கும் தெரியும் இது எதோ நல்ல எண்ணம் கொண்ட தலதளபதி ரசிகர் ஒருவர் தெறிக்கவிட்ட கதை என்று. இருந்தாலும், ரசிகர்கள் ஒற்றுமைக்காக சிலர் இதை ஷேர் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
A new whatsapp message rounded up about Theri film interval scene.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos