சரத்குமார், ராதிகாவுடன் விஷால் திடீர் சந்திப்பு... நடிகர் சங்கத் தேர்தலில் புதிய திருப்பம்!

நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால், ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.

Recommended Video

Actor RK Suresh Interview: விஷால் தனிப்பட்டு இருக்கறதுனாலதான் எங்களுக்கு கோவமே!- வீடியோ

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால், ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களமிறங்கி வெற்றி பெற்றவர் நடிகர் விஷால். இவர் தலைமையிலான பாண்டவர் அணி கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடித்து, நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி வருகிறது.

A new turn in artists association election

கடந்த தேர்தலில் இருந்தே சரத்குமாருக்கும் விஷாலுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாகவும் இருவருக்கு இடையே பிரச்சினை உள்ளது. இதை காரணமாக வைத்து தான், சரத்குமாரையும், ராதாரவியையும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார் விஷால்.

இந்நிலையில், நடிகர் விஷால் , ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மதிய வேளையில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. அப்போது, மூவரும் மனம்விட்டு பேசியதாக தெரிகிறது.

நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான பேசு பொருளாகியுள்ளது. இதனால் தேர்தலில் ஏதும் புதிய திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X