செம.. அஜித்தின் வலிமை குறித்து வெளியான அசத்தல் அப்டேட்.. ஜாலி மோடில் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படம் குறித்த அசத்தல் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான ஷுட்டிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது.

ஆக்ஷன் த்ரில்லரான வலிமை படத்தின் ஷுட்டிங் கொரோனா தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

வலிமை அப்டேட்

வலிமை அப்டேட்

இந்நிலையில் படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பரவும் தகவல் என்னவென்றால் வரும் 2021 பிப்ரவரியில் வலிமை படத்தின் ஷுட்டிங் நிறைவடையும் என தெரிகிறது.

60 நாட்கள் தேவை

60 நாட்கள் தேவை

வலிமை திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. வலிமை படத்தின் ஷுட்டிங்கை நிறைவு செய்ய இன்னும் 50 முதல் 60 நாட்கள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

பிப்ரவரி இறுதிக்குள்

பிப்ரவரி இறுதிக்குள்

அதில் அஜித்தின் பகுதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 30 நாட்கள் தேவை படுகிறதாம். இதில் அஜித்தின் போர்ஷன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் பிப்ரவரி இறுதிக்குள் படத்தின் ஷுட்டிங் முழுவதும் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது,

சுதா கொங்கரா?

சுதா கொங்கரா?

அதன் பிறகு அஜித்தின் 61வது படம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், அஜித்தின் 61 வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார் என்றும், இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளது என்றும் கூறப்பட்டது.

மறுப்பு தெரிவிக்கவில்லை

மறுப்பு தெரிவிக்கவில்லை

ஆனால் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி, அப்படி எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றார். இருப்பினும், 'தல 61' படம் குறித்து வெளியாகும் தகவல்கள் தொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X