twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் சார்... 'சங்கட்டமா' இருக்கு... முதல்ல இதைக் கவனிங்க!

    |

    அறிக்கை விடுவதில் கமல் ஹாஸன் பாணி ரொம்பவே வித்தியாசம். புரிந்தும் புரியாத மாதிரி இருக்கும் பல சொற்பிரயோகங்கள்.

    தனது அரசியல் பிரவேசத்துக்கு ட்விட்டரை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் ட்விட்டர் அரசியல் என்றார்கள். இப்போது அந்த ட்விட்டரைத்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

    A note to Kamal Haasan

    எல்லாம் ஓகே... அந்த ட்விட்டரில் கமல் விடும் அறிக்கைகள்தான் பிரச்சினையாகியுள்ளது.

    ட்விட்டரில் கமல்ஹாசன் எழுதும் பல வார்த்தைகள் பாமரர்களுக்கு சுத்தமாக புரிவதில்லை. பல நேரங்களில் கண்டிப்பாக ஒரு ட்ரான்ஸ்லேட்டர் தேவைப்படுகிறார். புரியாத சங்ககால வார்த்தைகளைத் தேடி எடுத்து போடுவது தவறில்லை.

    ஆனால் ட்விட்களில் வரும் தவறுகள், ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள்தான் தமிழ் ஆர்வலர்களை சங்கடப்படுத்துகின்றன. சில நாட்களுக்கு முன்னர் ஆட்சியரின் பதவியையே மாற்றிக் குறிப்பிட்டு பின்னர் அந்த ட்விட்டை நீக்கிவிட்டு வேறு ட்விட் செய்தார்.

    அடுத்த சாம்பிள்...

    'இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்.
    நான் செய்து உதவியல்ல கடமை. விரைலில் சந்திப்போம்.

    எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து. முவிவரம் கீழே

    எம் பலவருட வழக்கம். பொது அறிவுப்புகள் மக்கள் மன்றத்திலேயே நடக்கும்
    அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள்.

    -இப்படி நிறைய...

    ட்விட்டரில் ஒருமுறை எழுதினால் அதனை பின்னர் திருத்த முடியாது. நீக்கிவிட்டு தான் மறுபதிவு இட வேண்டும். எனவே கமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

    கவனிப்பாரா கமல்?

    English summary
    Nowadays Kamal Haasan's Tamil tweets containing with spelling mistakes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X