முதலில் சர்கார்.. இப்போது விஸ்வாசம்.. அருண் பாண்டியனின் அதிரடி!

சென்னை: நடிகர் அருண்பாண்டியனின் ஏஅன்ட் பி குரூப்ஸ் நிறுவனம், அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது.

இதே நிறுவனம்தான் விஜய் நடித்த சர்கார் படத்தின் உரிமையையும் வாங்கியது. இப்போது இதே நிறுவனத்திடம் அஜீ்த் படமும் வந்துள்ளது.

A and P groups to release Viswasam in Overseas

நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் பின்னர் படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, விநியோகஸ்தராக அவதாரம் எடுத்தார். அவரது ஏ அன்ட் பி குரூப்ஸ் நிறுவனம் பல்வேறு படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கி திரையிட்டு வருகிறது.

சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான சர்கார் படத்தின் வெளிநாட்டு உரிமையும் அருண் பாண்டியன் நிறுவனத்துக்கே போனது. இந்த நிலையில் தற்போது அஜீத் படத்தை வாங்கியுள்ளார் அருண் பாண்டியன்.

இதுதொடர்பான அறிவிப்பை விஸ்வாசம் படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. விஸ்வாசம் படத்தில் அஜீத் நடிக்க அவருக்கு ஜோடியாக நயனதாரா நடித்துள்ளார். சிவா இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X