வரைய வரைய வந்த KPY பாலா.. கலியுக கர்ணனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஓவியர்!

சென்னை: லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் பத்தவே இல்லை என்று பலர் புலம்பிக்கொண்டு இருக்கும்போது, தான் சம்பாதிக்கும் வருமானம் குறைவாக இருந்தாலும், அதை மன நிறைவோடு ஏழை எளியவர்களுக்கு அள்ளி கொடுத்து வருகிறார் பாலா. தொடர்ந்து இவர் செய்யும் உதவியால் நெகிழ்ந்து போன இவரின் தீவிர ரசிகர் ஒருவர், பாலாவின் ஓவியத்தை வரைந்து அவரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

விஜய் டிவி தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் பாலா, தற்போது இவர் சினிமாவிலும், சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர், தன்னுடைய சொந்த வருமானத்தின் மூலம் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்ற உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தையும் நடத்தி வருகிறார் பாலா.

A Painter who painted the actor KPY Bala image

50 பேருக்கு ஆயிரம் ரூபாய்: இவர் காதலர் தினத்தில் செக்யூரிட்டி, விவசாயி, துப்புறவு தொழிலாளி, ஆட்டோ ஓட்டுனர் என ஐம்பது பேரை ஒவ்வொருவராக தேடிச் சென்று தலா ஆயிரம் ரூபாய் கொடுத்து ஐ லவ் யூ சொன்னார். மேலும், இது இந்த மாசம் மட்டும் இல்ல,ஒவ்வொரு மாசமும் 50 பேருக்கு ஆயிரம் ரூபாயை தேடி சென்று கொடுப்பேன் என்றார். அவரின் இந்த செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புது பைக்: இதையடுத்து, சோஷியல் மீடியாவில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் இளைஞர் ஒருவர் பைக் இல்லை, ஒரு சைக்கிளுக்கு கூட வழியில்லை, வீட்ல பைக் வாங்க வேண்டும் என்று பத்தாயிரம் ரூபாய் கேட்டால் செருப்பால அடிப்பாங்க என்று பேசி இருந்தார். வறுமையில் விரக்தியில் அந்த இளைஞர் பேசியது இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ பாலாவின் கண்ணில் பட அந்த இளைஞர் வேலை செய்யம் பெட்ரோல் பங்கிற்கு மாறுவேடத்தில் சென்று, பெட்ரோல் போட்டுவிட்டு, அந்த இளைஞரின் கையில் பைக் சாவியை கொடுத்தார். பணம் இல்லை என்று வருத்தப்படுவர்களுக்கு கொடுத்து அழகுபார்த்து வருகிறார் பாலா.

A Painter who painted the actor KPY Bala image

வள்ளல் பாலா: இந்நிலையில், தேனி மாவட்டம் பொடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் பிரேம் குமார். இவர் பாலாவின் ஓவியத்தை, வள்ளல் பாலா என்ற வாசகத்தை வைத்தே பாலாவின் ஓவியத்தை வரைந்து இருக்கிறார் அந்த ஓவியர். KPY பாலா என்ற அடை மொழி மறைந்து, வள்ளல் பாலாவாக மாறி இருக்கும் இவரின் சமூக தொண்டை பாராட்டும் வகையில் ஓவியர் பிரேம் குமார் இந்த ஓவியத்தை வரைந்து, பாலாவை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X