Loki Verse: அடேங்கப்பா.. சும்மா தாறுமாறா இருக்கே.. தீயாக பரவும் லோகி வெர்ஸ் எடிட் வீடியோ!

சென்னை: அனிருத் இசையில் லியோ திரைப்படம் வெளியான நிலையில், தற்போது ரசிகர்களுக்காக லோகி வெர்ஸ் மியூசிக் எடிட் ஒன்றை வெளியிட்டு மரண மாஸ் காட்டி உள்ளார். அதை கேட்ட ரசிகர்கள், இந்த இசைக்கு ஏற்ப படக் காட்சிகளை சிங்க் செய்த வீடியோவை வெளியிட்டு வெறித்தனம் காட்டி உள்ளனர்.

A Pakka visual edit for Loki verse makes LCU fans happy

லியோ திரைப்படம் 2 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய், லலித் குமார், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா மற்றும் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் செம சந்தோஷத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

A Pakka visual edit for Loki verse makes LCU fans happy

விஜய்க்கு கார் இல்லை: ஜெயிலர் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்துக்கு கார் மற்றும் செக் பரிசாக கலாநிதி மாறன் வழங்கிய நிலையில், அதே போல விஜய்க்கும் கொடுப்பார்களா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனக்கு அதெல்லாம் வேண்டாம். நடிக்க சம்பளம் கொடுக்கிறீங்க அது மட்டும் போதும் என மாஸ்டர் படம் வெளியான போதே விஜய் சொல்லி விட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் பாராட்டு: லியோ திரைப்படத்தின் புரொடக்‌ஷன் வேல்யூ சிறப்பாக உள்ளது என லலித் குமாரின் தயாரிப்பு விஷயத்தை குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக லலித் குமார் தனது லேட்டஸ்ட் பேட்டியில் வெளிப்படுத்தி உள்ளார்.

A Pakka visual edit for Loki verse makes LCU fans happy

லோகி வெர்ஸ்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என 5 படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இதில், கைதி, விக்ரம் மற்றும் லியோ என 3 படங்கள் எல்சியூவாக உள்ள நிலையில், மூன்று படங்களில் இடம்பெற்ற இசையை மிக்ஸ் செய்து லோகி வெர்ஸ் என உருவாக்கி உள்ளனர்.

A Pakka visual edit for Loki verse makes LCU fans happy

தெறி எடிட்: கைதி, விக்ரம், லியோ என மூன்று படங்களில் இடம்பெற்ற வெறித்தனமான இசையை லோகி வெர்ஸ் என உருவாக்கி உள்ள நிலையில், அதற்கு தகுந்தது போல விஷுவல் காட்சிகளை வைத்து ரசிகர்கள் செய்த மரண மாஸ் எடிட் டிரெண்டாகி வருகிறது. லியோ திரைப்படம் ஜெயிலர் படத்துக்கு அடுத்து மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X