என்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது.. சச்சி மறைவுக்கு பிரபல ஹீரோவின் டச்சிங் போஸ்ட்!
கொச்சி: என்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது என்று இயக்குனர் சச்சி மறைவுக்கு எழுதிய இரங்கல் கடிதத்தில் நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள பட இயக்குனர் சச்சி என்ற சச்சிதானந்தம். 'அய்யப்பனும் கோஷியும்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார்.
அதற்கு முன் டிரைவிங் லைசன்ஸ், ராம்லீலா உள்பட பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார். அனார்கலி என்ற படத்தையும் இயக்கி உள்ளார்.

நடிகர் பிருத்விராஜ்
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். இது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் அவரது மறைவை அடுத்து, அவரது நண்பரும், நடிகருமான பிருத்விராஜ், உருக்கமான இரங்கல் கடிதத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவருக்கும் சச்சிக்குமான நெருக்கம், மலையாள சினிமா பற்றி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

அமைதியாக மறுக்கிறேன்
சச்சி, ஏராளமான மெசேஜ்கள் வந்திருக்கின்றன. பேசிய போன் அழைப்புகளும் எப்படியிருக்கிறேன் என்று கேட்கின்றன, என்னை ஆறுதல் படுத்துகின்றன. உங்களையும் என்னையும் அறிந்தவர்களுக்கு நம்மை பற்றியும் தெரியும். பெரும்பாலானவர்கள் என்னிடம் சொன்ன ஒரு விஷயத்தை அமைதியாக மறுக்கிறேன். அது, நீங்கள் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டீர்கள் என்பது!
View this post on InstagramA post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on
உங்கள் உச்சமல்ல
உங்களது அனைத்துக் கனவுகளையும் யோசனைகளையும் அறிந்தவனாக, அய்யப்பனும் கோஷியும் உங்கள் உச்சமல்ல என்று எனக்குத் தெரியும். அது நீங்கள் விரும்பிய ஆரம்பம். உங்கள் அனைத்து படங்களும் இந்த இடத்துக்கான பயணமாக அமைந்தது. எனக்குத் தெரியும், பல சொல்லப்படாத கதைகள், நிறைவேறாத கனவுகள், நள்ளிரவு கதை விவரிப்புகள், வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் என நிறைய உண்டு.

சினிமா திட்டம்
போன் அழைப்புகளும் இருக்கின்றன. வருங்காலத்துக்காக சில திட்டங்களை உருவாக்கினோம், நீங்களும் நானும். இப்போது நீங்கள் சென்று விட்டீர்கள். உங்கள் சினிமா பார்வை பற்றியும் வருங்கால சினிமா திட்டம் பற்றியும் வேறு யாரிடமும் நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறீர்களா என்பது தெரியாது. ஆனால், நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள்.

நிறைவேற்றுவேன்
அடுத்த 25 வருட மலையாள சினிமாவும் எனது சினிமா வாழ்க்கையும் நீங்கள் இருந்திருந்தால் நிச்சயம் வேறொன்றாக இருக்கும் என்பதை அறிவேன். சினிமாவை விடுங்கள் சச்சி, நீங்கள் என்னுடன் உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன். அந்த வாய்ஸ் மெசேஜ்களில் ஒன்றை மீண்டும் பெறுவதற்காக, அடுத்த போன் அழைப்புக்காக அதை நான் செய்வேன்.

என்னைத் தாக்கியது
நீங்கள் எப்போதும் சொல்வீர்கள், நாம் ஒரே மாதிரியாக இருக்கிறோம் என்று. அப்படித்தான். இப்போது அதை நம்புகிறேன். என்னைவிட நீங்கள் வித்தியாசமாக உணர்கிறீர்கள். ஏனென்றால், இதே போன்ற துக்கம் கடைசியாக 23 வருடத்துக்கு முன் ஒரு ஜூன் மாதம் என்னைத் தாக்கியது. உங்களை அறிந்ததில் எனக்கு பெருமை சச்சி.

கிளைமாக்ஸ்
என்னுடைய ஒரு பகுதி உங்களுடன் சென்றுவிட்டது. இப்போதிருந்து உங்களை நினைவில் கொள்கிறேன். உங்களுடன் இருக்கும் எனது மற்றொரு பகுதியையும் நினைவு கொள்வதற்கு சமம் அது. அமைதியாக ஓய்வெடுங்கள் ஜீனியஸ். உங்களின் மறுபுறத்தைப் பார்க்கிறேன். ஆனாலும் இன்னும் சந்த சான்டல்வுட் கதையின் கிளைமாக்ஸை நீங்கள் சொல்லவே இல்லையே. இவ்வாறு பிருத்விராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications