ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: அதிர வைத்த பெட்டிக்கடைக்காரர்
சென்னை: ஒரு பெட்டிக் கடையில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.
நான் அரசியலுக்கு வருகிறேன் கண்ணா என்று ரஜினிகாந்த் அறிவித்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் அரசியல் கட்சி துவங்கவில்லை. இந்நிலையில் டிவி சேனல் துவங்கும் வேலையை துவங்கிவிட்டார்.
டிவி சேனல் எல்லாம் துவங்குகிறார் என்றால் தலைவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
கடன்
ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.

மீடியா
ரஜினி அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ மீடியாவுக்கு வருகிறார். டிவி சேனல் துவங்கி மீடியா அதிபர் அவதாரம் எடுக்க உள்ளார். தப்பு இல்ல, தப்பு இல்ல.
மீம்ஸ்
பாவம், ரஜினி சொன்ன பதிலை வைத்து இப்படி கலாய்த்து மீம்ஸ் போடுகிறார்கள்

கிண்டல்
ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறவதற்கு முன்பில் இருந்து அவரை கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். எத்தனை பேர் மீம்ஸ் போட்டாலும் அதை பார்த்து சிரித்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கும் பக்குவத்தை ரஜினியிடம் இருந்து கற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











