Rajini: ஜெயிலர் 2.. இணையத்தில் வேகமாக பரவும் ரஜினியின் போட்டோ!
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. 'கூலி' படத்தின் படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்த படமான 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
ஜெயிலர் மற்றும் வேட்டையன் படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் நாகர்ஜுனா, சௌபின், உபேந்திரா என பல மொழி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். தங்கத்தை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு படம் கூட ஆயிரம் கோடி வசூலை பெறாத நிலையில், அந்த குறையை கூலி திரைப்படம் போக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.
ரஜினிகாந்த்: கூலி திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கவனம் செலுத்தி உள்ள லோகேஷ் கனகராஜ் சோஷியல் மீடியாவில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். லியோ படத்தின் போதும், லோகேஷ் சில நாட்கள் சோஷியல் மீடியாவில் இருந்து விலகி, படம் வெளியான பின் என்ட்ரி கொடுத்து இருந்தார். இதேபோல, இந்த முறையும் கூலி படம் வெளியான பின் சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்த கையோடு ரஜினி காந்த் ஜெயிலர் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த நிலையில், தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக, தனியார் நட்சத்திர ஓட்டலில் ரஜினி காந்த் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். கேரளாவில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நேற்று, ஓட்டலில் தங்குவதற்காக சென்ற ரஜினியை 'ஹுக்கும்' பாட்டு போட்டு படக்குழுவினர் வரவேற்றனர்
ஸ்டைல் மன்னன்: இந்நிலையில், இன்று கேரள மாநில பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான பி.ஏ. முகமது ரியாஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த போட்டோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் என கேப்ஷன் போட்டுள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் பலர் அந்த போட்டோவை இணையத்தில் ஷேர் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர். ஜெயிலர் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் இரண்டா பாகத்தில் உள்ள நிலையில், இந்த லிஸ்டில் பாலைய்யாவும் இணைந்து உள்ளார். அவர், ஜெயிலர் 2 படத்தில் வரும் வெறும் 10 நிமிட காட்சிக்காக ரூ.50 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











