Simbu - சிம்பு காதலிக்கும் பெண் இவரா?.. வெளியானது புகைப்படம்.. விரைவில் திருமணமா?
Simbu (சிம்பு) நடிகர் சிம்பு காதலில் விழுந்துவிட்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
கோலிவுட்டில் திறமையான நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடல் பாடுவது என பல தளங்களில் தன்னை நிரூபித்தவர். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த அவர் ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக நடித்த மாநாடு திரைப்படம் மெகா ஹிட்டானது.
100 கோடி ரூபாய் வசூல்?: வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் டைல் லூப்பை மையமாக வைத்து உருவாகியது. வெங்கட் பிரபுவின் திரைக்கதை, சிம்புவின் நடிப்பு என அட்டகாசமாக அமைந்த அந்தப் படம் சிம்புவுக்கு தரமான கம்பேக்காக அமைந்து 100 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிம்புவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்தனர்.
பிஸி சிம்பு: மாநாடு தந்த வெற்றியை தொடர்ந்து தனது ஃபேவரைட் இயக்குநரான கௌதம் மேனனுடன் இணைந்தார். ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து கௌதம் உருவாக்கியிருந்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க; அடுத்து நடித்த பத்து தல படம் சறுக்கியது. இருந்தாலும் எஸ்டிஆரின் நடிப்பு படு மாஸாக இருந்தது.
எஸ்டிஆர் 48: இந்த சூழலில் அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் கமிட்டாகியிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட சில கலைகளையும் கற்றுவருகிறார்.உடல் ரீதியாகவும் படு ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். பீரியட் பட ஜானரில் எஸ்டிஆர் 48 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல்?: இதற்கிடையே சிம்பு இரண்டு காதல் தோல்விகளை பார்த்தவர். 40 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். எனவே அவருக்கு எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்வியையும் அவரது ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் சிங்கிளாகவே இருந்துவருகிறார் சிம்பு.
இந்நிலையில் வெளிநாட்டில் ஒரு ரெஸ்டாரண்ட்டில் ஒரு பெண்ணுடன் சிம்பு அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. இதனையடுத்து அவர் அந்தப் பெண்ணைத்தான் காதலிக்கிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கின்றனர். மேலும் விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துவருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் இளம்பெண்ணின் முகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











