மாலையும் கழுத்துமாக ரவி மோகன் - கெனிஷா.. என்ன விஷயம்னு பாருங்க?

சென்னை: ரவி மோகன் சமீபத்தில் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறினார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பின்னணி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார். இதற்கிடையே ஆர்த்தியை அவர் விவாகரத்து செய்வதாகவும் அறிவித்து நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார். சூழல் இப்படி இருக்க கெனிஷாவும் ரவியும் ஜோடியாக வந்திருந்தது பெரிய சர்ச்சையை தமிழ் சினிமா உலகில் ஏற்படுத்தியது.

சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த ரவி மோகன் இப்போது சர்ச்சையின் நாயகனாக மாறியிருக்கிறார். அந்த சர்ச்சை அவரை சுற்றி உருவாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய கரியரில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். ஆர்த்தியுடனான பிரிவை அறிவித்ததை அடுத்து அவரையும் கெனிஷாவையும் இணைத்து வைத்து பேசினார்கள். ஆனால் ரவியோ அதனை திட்டவட்டமாக மறுத்து விளக்கமளித்திருந்தார்.

ஆர்த்தி எமோஷனல்: அதனையடுத்து அந்த விஷயம் கொஞ்சம் ஆறிப்போன சூழலில்தான் கெனிஷாவுடன் திருமணத்துக்கு வந்தார். அந்த வருகையை பார்த்த ஆர்த்தி எமோஷனலாகவும், காட்டமாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அவர் நழுவி சென்றுவிட்டார். தன்னுடைய பெயர் இன்னமும் ஆர்த்தி ரவிதான். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை என்னை ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.

ஒரு தாயாக நான் குரல் எழுப்புகிறேன்' என்று பல விஷயங்களை குறிப்பிட்டு உருக்கத்தோடு தெரிவித்திருந்தார். அவரது அறிக்கையை அடுத்து அவருக்கு நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரவி, 'தனது குழந்தைக்கு நடந்த விபத்தை மறைத்துவிட்டார்கள். தந்தை, தாய்க்கு பணம் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை. பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு என்னை பொறுப்பேற்க வைத்தார்கள்' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

A photo of Ravi and Kenisha with garlands around their necks has become trending
Photo Credit:

ஆர்த்தியின் தாய் விளக்கம்: அதனைத் தொடர்ந்து, நிலைமை கைமீறி போவதை உணர்ந்த ஆர்த்தியின் அம்மா சுஜாதா ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அந்த விளக்கத்தில், 'ரவியை நான் ஹீரோவாக, மாப்பிள்ளையாக மட்டும் பார்க்கவில்லை. ஒரு மகனாக பார்க்கிறேன். அழகாக ஒரு வாழ்ந்த ஒரு மகள் இப்போது வாழாவெட்டியாக இருப்பதை பார்க்க்கும் வலி ஒரு தாய்க்கு மட்டும்தான் தெரியும்.

ஆதாரம் இருக்கிறதா?: நான் ரவியை பல நூறு கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். ஒரு ரூபாய் கடனுக்காகவாவது அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். நான் கொடுமைக்கார மாமியார் கிடையாது" எனவும் ரொம்பவே எமோஷனலாக கூறியிருந்தார். இப்படி மாற்றி மாற்றி இரண்டு தரப்புகளும் அறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்க நீதிமன்றம் தலையிட்டு அதனை நிறுத்தி வைத்தது.

மாலையுடன் ரவி, கெனிஷா: மேலும், ஆர்த்தியோ மாதம் 40 லட்சம் ரூபாய் தனக்கு ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் ரவியும்,மோகனும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. அவர்கள் குன்றக்குடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, 'என்ன திடீர்னு இரண்டு பேரும் மாலையும், கழுத்துமாக இருக்காங்க. என்னாச்சுனு தெரியலையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முன்னதாக கெனிஷா ஒரு பேட்டியில், நான் எனது சோல் மெட்டை கண்டுவிட்டேன். இந்த சோல் மெட் ரொம்பவே அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறார்' என தெரிவித்திருந்தார். பேட்டி மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் அவர் போடும் போஸ்ட்டுகள் பெரிய கவனத்தை ஈர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X