பிரின்ஸஸ் பிறந்தநாளை கொண்டாடிய பிரின்ஸ்… ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன், ஆராதனாவின் க்யூட் செல்ஃபி

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள பிரின்ஸ் முதல் நாளில் 9 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலாகி வருவதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரின்ஸ் எஸ்கே

பிரின்ஸ் எஸ்கே

சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில நாட்களாக ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சின்ன திரையில் இருந்து சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன், இன்றளவும் அதே பண்புடன் இருப்பது அவருக்கான ப்ளஸாக பார்க்கப்படுகிறது. அதேபோல், சின்ன திரையில் பிரபலமான பல கலைஞர்கள், கலக்கப் போவது யாரு நட்சத்திரங்களை தனது படங்களில் நடிக்க வைத்து அழகு பார்க்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நேற்று முதல் திரைக்கு வந்தது.

பிரின்ஸஸ் உடன் பிரின்ஸ்

பிரின்ஸஸ் உடன் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. ஆனால், அடுத்தடுத்து வெளியான சில நெகட்டிவான விமர்சனங்கள், இனிவரும் நாட்களில் பிரின்ஸ்க்கு பெரிய சோதனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 9 கோடி வரை வசூலித்துள்ளது பிரின்ஸ். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி செம்ம வைரலாகியுள்ளது.

பிரின்ஸஸ் பிறந்தநாள்

பிரின்ஸஸ் பிறந்தநாள்

மகள் ஆராதனாவுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சிவகார்த்திகேயன், "ஹேப்பி பர்த்டே டூ மை பிரின்ஸஸ்" ( Happy birthday to my Princess ) என பதிவிட்டுள்ளார். இருவருமே கூலர்ஸ் அணிந்துகொண்டு ஸ்டைலாக சைட் லுக்கில் எடுத்துகொண்ட இந்த செல்ஃபி, செம்ம க்யூட்டாக இருக்கிறது. மகள் ஆராதனாவின் போட்டோவுடன் அவருக்கு சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, கவின், ஸ்ருதிகா அர்ஜுன், மிர்ணாள் என பல திரை பிரபலங்களும் ஆராதனாவை வாழ்த்தி கமெண்ட்ஸ் செய்துள்ளனர். ஆராதனாவும் சின்ன வயதிலேயே பாடகியாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தீபாவளி கொண்டாட்டம்

அடுத்து தீபாவளி கொண்டாட்டம்

பிரின்ஸ் ரிலீஸ், பிரின்ஸஸ் ஆராதனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஹேப்பி மூடில் இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து தீபாவளி செலிப்ரேட் பண்ண காத்திருக்கிறார். தீபாவளியை முடித்துவிட்டு உடனடியாக மாவீரன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் சிவகார்த்திகேயன், அடுத்த படம் குறித்த அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அயலான் ரிலீஸ் தேதி, வெங்கட் பிரபுவுடன் இணையும் அடுத்த படம் குறித்த அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X