Rajini - சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் இணைந்த கமல்.. ரஜினிக்கு முன்னரே பட்டம் அவரிடம் இருந்ததா?.. இது புதுசு

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் கமல் ஹாசன் இணைந்துவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இந்திய சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான் அது ரஜினிகாந்த்தான் என்று மார்தட்டி சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்கின. இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டாகினர்.

A photo of Superstar Kamal Haasan in the poster of the film Ilamai Oonjal Aadugiradhu is trending

அடுத்த சூப்பர் ஸ்டார்: இப்படிப்பட்ட சூழலில் விஜய் நடித்த படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலிப்பதாக கூறப்பட்டுவந்தன. எனவே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர். அதற்கு ரஜினி ரசிகர்களோ அதெல்லாம் இல்லை என்று தொடர்ந்து பதிலடி கொடுக்க விஜய் ரசிகர்களும் வாள் சுழற்ற ஆரம்பித்தனர்.

குட்டி கதை: இதனால் ரஜினிக்கும், விஜய்க்கும் போட்டி என்று பேசப்பட்டது. நிலவரம் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதையை சொன்னார். அதனையடுத்து இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நான் எப்போதோ வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும் பேசினார். ரஜினி சொன்ன கதை நேரடியாக விஜய்யை தாக்குகிறது என்ற பேச்சு பரவலாக எழுந்தது.

ஒரே சூப்பர் ஸ்டார்தான்: ரஜினியின் அந்தப் பேச்சுக்கு விஜய் கண்டிப்பாக பதிலடி கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் நினைத்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என சொல்லி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் அப்பா சட்டையையும், வாட்சையும் மகன் அணிந்து பார்ப்பதில்லையா என்று கூறி தனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் மீது ஆசை வந்ததில் என்ன தவறு இருக்கிறது என்பதையும் மறைமுகமாக உணர்த்தினார்.

A photo of Superstar Kamal Haasan in the poster of the film Ilamai Oonjal Aadugiradhu is trending

பஞ்சாயத்தில் கமல்: இந்நிலையில் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தில் கமல் ஹாசனையும் தற்போது ரசிகர்கள் இணைத்திருக்கிறார்கள். அதாவது கடந்த 1978ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் இணைந்து நடித்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது. அந்தப் படத்தின் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் கமல் ஹாசன் என்று இருக்கும் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு முன்னரே கமலிடம்தான் இருந்ததா என கேள்வி கேட்டுவருகின்றனர்.

ரஜினிகாந்த் இப்போது தன்னுடைய 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதற்கடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். விஜய் தன்னுடைய 68ஆவது படத்திலும், கமல் ஹாசன் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம், ஹெச்.வினோத் இயக்கும் படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார் என குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X