ஜவான் படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் இணைந்த விஜய்: இங்கேயும் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ லீக்கா?

மும்பை: பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Thalapathy Vijay | அடுத்த படத்தின் Title இதுதானா? வெறித்தனமா இருக்கே! *Kollywood

வம்சி பைடிபல்லி இயக்கும் 'வாரிசு' தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

வாரிசு படத்தில் பிஸியான விஜய்

வாரிசு படத்தில் பிஸியான விஜய்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் வெளியான பின்பு இயக்குநர் நெல்சன், ரசிகர்களால் அதிகமாக ட்ரோல் செய்யப்[பட்டார். அதனைத் தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கும் 'வாரிசு' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்

'வாரிசு' திரைப்படத்தின் ஷூட்டிங், சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் என மாறி மாறி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளதால், விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அடுத்தடுத்து பல போட்டோக்கள் இணையத்தில் கசிந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு, படபிடிப்புத் தளத்தில் செல்போன்கள் பயன்படுத்த தடைவிதித்தது. இருப்பினும் தொடர்ந்து போட்டோக்கள், வீடியோக்கள் லீக்காகி வருகின்றன.

ஷாருக்கானுடன் இணையும் விஜய்

ஷாருக்கானுடன் இணையும் விஜய்

இதனிடையே விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ, தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா, காமெடி கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பிஸியாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக 'ஜவான்' படத்தில், விஜய் ஒரு கேமியோ ரோலில்; நடிப்பதாக சொல்லப்பட்டது.

ஜவான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ச்சி

ஜவான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ச்சி

'வாரிசு' படத்தின் படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினத்தில் இருந்த விஜய், திடீரென மும்பைக்கு பறந்துள்ளார். 'ஜவான்' படத்தில் கேமியோர் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்த விஜய், அதற்காகவே மும்பை பறந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் விஜய்யும் ஷாருக்கானும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக இருக்கும் புகைப்ப்டம் கசிந்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், ஜவான் படக்குழுவினரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். வாரிசு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் லீக்கான நிலையில், இப்போது ஜவான் படப்பிடிப்பில் விஜய் இருக்கும் போட்டோவும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X