அடடா அனி அட்டகாசமா இருக்காரே.. ஆட்டோக்காரர் ஆன அனிருத் - இணையத்தை கலக்கும் ஃபோட்டோ

சென்னை: இசையமைப்பாளர் அனிருத் ஆட்டோவில் இருந்தபடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினியின் உறவுக்காரரான நடிகர் ரவிச்சந்திரனின் மகன் அனிருத். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தற்போது தமிழின் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். மேலும், ராக்ஸ்டார் என்றும் அவர் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

முதல் படத்திலேயே ஃபேமஸ் ஆன அனிருத்

முதல் படத்திலேயே ஃபேமஸ் ஆன அனிருத்

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான படம் 3. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த அந்தப் படத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சுமாரான வரவேற்பைப் பெற்றாலும் அந்தப் படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. குறிப்பாக, அனிருத் இசையமைத்து தனுஷ் பாடியிருந்த ஒய் திஸ் கொலவெறி உலக அளவில் ஹிட்டாகி ட்ரெண்டானது. இதனால் முதல் படத்திலேயே அனிருத் அனைவராலும் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

இது அனிருத் Era சார்

இது அனிருத் Era சார்

3 படத்தின் பாடல்கள் மிகப்பெரும் அளவில் ஹிட்டடிக்க அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி அவர் இசையமைத்த எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, டேவிட் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறிவிட்டார் அனிருத். மெலடி, ஃபோக், வெஸ்டர்ன் என எல்லா ஜானரிலும் அனிருத் சிக்சர் அடித்துக்கொண்டே இருப்பவர்.

அனிருத்தின் கை நிறைய படங்கள்

அனிருத்தின் கை நிறைய படங்கள்

டாப் இசையமைப்பாளரான அனிருத் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைக்க ஆரம்பித்துவிட்டார். ரஜினி, கமல், விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்திலும் அனிருத்தே இடம்பெற ஆரம்பித்தார். ரஜினிக்காக தேவா இசையமைத்த சூப்பர் ஸ்டார் இசையை பேட்ட படத்துக்காக ரீ க்ரியேட் செய்தது, கமலுக்காக ஏற்கனவே வெளியான விக்ரம் பாடலை ரீ க்ரியேட் செய்தது என அதகளம் செய்துகொண்டிருக்கிறார் அனிருத்.

ஆட்டோக்காரர் ஆன அனிருத்

ஆட்டோக்காரர் ஆன அனிருத்

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோவில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் அந்தப் பாடலுடன் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற, 'நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்' பாடலை இணைத்திருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், அனிருத் ரஜினிகாந்த்தின் வெறித்தனமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்தப் புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கோலிவுட்டில் படுபிஸியான அனிருத்

கோலிவுட்டில் படுபிஸியான அனிருத்

அனிருத் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ, ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் மாறிவிட்டார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X