லீக்கானதா மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட்.. வைரலாகும் டிராக் லிஸ்ட்.. குழப்பத்தில் படக்குழு!
சென்னை: மாநகரம் மற்றும் கைதி போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ள படம் தான் மாஸ்டர்.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மேலும், மாளவிகா மோகனன் சாந்தனு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். இவர் இதற்கு முன்பு விஜய் நடித்த கத்தி படத்திற்கு இசை அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதிலும் கத்தி தீம் மியூசிக் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது.

இதனிடையே மாஸ்டர் படத்தின் போஸ்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. தற்போது வரை மூன்று போஸ்டர்கள் வந்துள்ளன ஆனால் இதில் எதிலும் பாடலாசிரியர்கள் பெயர் இடம் பெறவில்லை. கைதி படத்தை போல மாஸ்டர் படத்திலும் பாடல்கள் இல்லாமல் இருக்கும் என்று பலர் நினைத்தனர்.
தற்போது சமுக வலை தளங்களில் இது தான் மாஸ்டர் படத்தின் பாடல்கள் மற்றும் பாடகர்கள் குறித்த டிராக் லிஸ்ட் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதில் ஆறு பாடல்கள் மற்றும் நான்கு தீம் மியூசிக் இடம் பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் கசிந்து விட்டதா? அல்லது ரசிகர்கள் உருவாக்கிய டிராக் லிஸ்ட்டா இது என்பது தெரியவில்லை. இதுகுறித்த அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











