Nayanthara And Vignesh Shivan -நீச்சல் குளத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா..ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: Nayanthara And Vignesh Shivan (நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்) விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறர்.
ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனவே அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் லைன் அப்: இதற்கிடையே விக்னேஷ் சிவன் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையின் இரண்டாம் பாதியை தயாரிப்பு நிறுவனம் மாற்ற சொல்ல அதற்கு ஒத்துக்கொள்ளாத அவர் படத்திலிருந்து விலகினார். அதனையடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். நிச்சயம் இந்தப் படத்தின் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று அசுரத்தனமாக கதையை தயார் செய்துவருகிறார்.
நீச்சல் குளத்தில் நயன்: இந்நிலையில் விக்னேஷ் சிவன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். சூழல் இப்படி இருக்க விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார்.
நீச்சல் குளத்தில் நயன் படு கேஷுவலாக விக்னேஷ் சிவன் தோளில் கை போட்டு சிரித்தபடி இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியே பல வருடம் மகிழ்ச்சியாகவும், ரிலாக்ஸாகவும் வாழ வாழ்த்துகள் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











