வெளிநாட்டில் வேலை பார்க்கும் முன்னாள் ஹீரோ.. அங்கேயே குடும்பத்துடன் செட்டிலானதால் ரசிகர்கள் ஷாக்!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோ, தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டிலான தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
Recommended Video
தமிழில், கதிர் இயக்கிய 'காதல் தேசம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், பெங்களூரைச் சேர்ந்த அப்பாஸ்.
வினித், தபு உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.

பம்மல் கே சம்மந்தம்
பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

பேஷன் டிசைனர்
இதற்கிடையே எரும் அலி (Erum Ali) என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் பேஷன் டிசைனர். ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவர்களுக்கு எமிரா, அய்மான் ஆகிய குழந்தைகள் உள்ளன.

நியூசிலாந்து
தொடர்ந்து தமிழில் நடித்து வந்த அப்பாஸுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார். அங்கு ஆக்லாந்து நகரில் செட்டில் ஆகிவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு அப்பாஸின் மனைவி ஆடை வடிவமைப் பாளராகப் பணியாற்றி வருகிறார்.

வாய்ப்பில்லை
அப்பாஸும் அங்கு பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர்கள் குழந்தைகள் அங்கு படித்து வருகின்றன. 'அப்பாஸ் நியூசிலாந்தில் செட்டிலாகி சில வருடங்கள் ஆகின்றன. அவர் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்காக, இப்போது இங்கு வர வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











