திடீர் மாரடைப்பு.. பிரபல நடிகர் ஐசியுவில் அனுமதி.. தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் சோகம்!
ஹைத்ராபாத்: திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி ராஜா. 58 வயதான இவர் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்கள் உட்பட ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

மாரடைப்பு
அதோடு தெலுங்கு நடிகர் சங்கமான மா அமைப்பின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். ஹைத்ராபாத்தில் வசித்து வரும் நடிகர் சிவாஜி ராஜாவுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

ஐசியுவில் அனுமதி
இதனை தொடர்ந்து உடனடியாக ஹைத்ராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிவாஜி ராஜா. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்த மருத்துவர்கள் அவரை ஐசியுவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஹார்ட் ஸ்டென்ட்
இந்நிலையில் சிவாஜி ராஜாவின் நண்பரும், பிஆர்ஓவுமான சுரேஷ் கோண்டெட்டி, இதுதொடர்பாக தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதில் "நான் இப்போது அவருடன் பேசினேன். அவரது பிபி வெகுவாகக் குறைந்தது, இதனால் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு ஹார்ட் ஸ்டென்ட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

நாளை அறுவை சிகிச்சை
ஹார்ட் ஸ்டென்ட் என்பது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும் போது சரியாக ரத்த ஓட்டம் சீராக செல்ல வைக்கப்படும் ஒரு செயற்கை குழாய் ஆகும். சிவாஜி ராஜாவுக்கு இந்த இதய அறுவை சிகிச்சை நாளை செய்யப்படும் என தெரிகிறது.

ரசிகர்கள் சோகம்
நடிகர் சிவாஜி ராஜா, மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். சிவாஜி ராஜாவுக்கு என ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











