என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்.. ரஜினியை வம்பு இழுக்கும் விஜய் ரசிகர்கள்.. போஸ்டரால் பரபரப்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வம்பு இழுக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்திருந்தார்.

வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில், நடிகர் சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சூப்பர் ஸ்டார் சர்ச்சை: சரத்குமாரின் பேச்சுக்கு தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து விஜய் தான் நம்பர் ஒன் என்றும் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட தளபதி பட்டம் தமிழ் சினிமாவில் பெரியது என்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்தனர்.

இரண்டு ரசிகர்களும் சண்டை: அதே போல ரஜினிகாந்த் ரசிகர்களும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த், உலக நாயகன் என்றால் அது கமல் ஹாசன் தான் என்று இருக்கும் போது, அந்த பட்டத்தை இன்னொருவருக்கு பொருத்தி பார்க்கவே முடியாது. அதே போல, சூப்பர் ஸ்டார் என்று சொன்னா, தமிழ்நாட்டில் என்ன ஏன் இந்தியாவிலேயே அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்று சோஷியல் மீடியாவில் இரண்டு ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.
காக்கா கழுகு கதை: ஆறு மாதத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையை தூண்டும் வகையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலில் பேர தூக்க நாலு பேரு... அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு...குட்டி செவுத்த எட்டி பார்த்தா...உசிரு கொடுக்க கோடி பேரு என இந்த படலின் மூலம் சரியான பதில் அடி கொடுத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில்,காக்க கழுகு கதையை சொல்லி மேலும் சர்ச்சையை கிளப்பினார்.

உனக்கு ஏன் அச்சம்: ரஜினியின் பேச்சுக்கு விஜய் லியோ இசைவெளியீட்டு விழாவில் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள் ரஜினியை வம்பு இழுக்கும் வகையில், மதுரையில் 'என்னுடைய உச்சம்... உனக்கு ஏன் அச்சம்' என்று விஜய் மற்றும் ரஜினியின் போட்டோவை பதிவிட்டு போஸ்டரை ஒட்டிஉள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











