Vijay - மத்தியில் மோடியின் நல்லாட்சி.. மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி.. ரசிகர்கள் அலப்பறை
சென்னை: Vijay (விஜய்) விஜய் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வருவது தொடர்பாக அடித்திருக்கும் போஸ்டர் மதுரையில் கவனத்தை பெற்றுள்ளது.
கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆர்மபத்தில் அமைதி காத்துவந்த அவர் சமீபகாலமாக நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஊக்கத்தொகை: அதன்படி 234 தொகுதிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களை அழைத்து சால்வை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். அப்போது அந்த விழாவில் விஜய் பேசியது தமிழ்நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வருவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அந்தப் பேச்சில் தெரிந்ததாக பலர் கூறினார்கள்.
இரவு நேர பாடசாலை: அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர பாடசாலை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அமைக்கப்பட்டது. இதையும் பார்த்த ரசிகர்கள் தளபதி ஃபுல் பார்மில் இருக்கிறார். கண்டிப்பாக அவர் அரசியலுக்கு வந்து அடுத்த முதலமைச்சர் ஆவார் என்று தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்துக்கு மேல் விஜய்தான் அடுத்த முதலமைச்சர் என்று போஸ்டரும் ஒட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இலவச சட்ட ஆலோசனை மையம்: இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இலவச சட்ட ஆலோசனை மையம் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இப்படி விஜய்யின் ஒவ்வொரு அடியும் அரசியலுக்கு அச்சாரம் போடுவதாகவே இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். ஆனால் விஜய்யோ அமைதி காத்து வருகிறார்.
போஸ்டர்: இந்நிலையில் மதுரையில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக அடிக்கப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது நாளிதழ் வடிவில் அடிக்கப்பட்டிருக்கும் அந்தப் போஸ்டரில் மத்தியில் மோடியின் நல்லாட்டி மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மக்கள் பேச்சு. தொலைபேசியில் பாரத பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகை என்ற வாசகத்துடன்;
விஜய்க்கு டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன், அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவிப்பதுபோல் புகைப்படம் இருக்கிறது. இதனை பார்த்த பலரும் விஜய்யை ஒருவழியாக ஆக்காமல் விடமாட்டார்கள் போலவே என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். விஜய் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











