வெளியானது தெலுங்கு சினிமாவின் அஜித்.. பவன் கல்யாண் படத்தின் அப்டேட்!

By Staff

ஹைதராபாத்: பவர் ஸ்டார் பவன் கல்யாணின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை கப்பர் சிங் படத்தை இயக்கிய ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். மற்றும் இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் அஜித் என்றே கருதப்படுகிறார். தனது படங்களால் இங்கு எப்படி தல அஜித் ரசிகர்களை சம்பாதித்ததை போல தெலுங்கிலும் பவன் கல்யாண் அவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து உள்ளார்.

A powerful update is from pawan kalyans next Movie

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி தான் இவர். ஆனால் அந்த அடையாளம் எதுவும் இல்லாமல் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். ரசிகர்களால் பவர் ஸ்டார் என்ற அழைக்கப்படுபவர் தான் இந்த பவன் கல்யாண்.

அக்கடா அம்மாயி இக்கடா அப்பாயி என்ற படம் முலம் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த பவண் தனது நான்காவது படமான தோல்லி பிரேமா என்ற படத்தில் நடித்தார் பவன் கல்யாண் இப்படம் சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

இதன் பின் தெலுங்கு சினிமாவின் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத்தின் முதல் படமான படத்தில் நடித்தார் பவன். இப்படம் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது.

இதன் பின் ரொமேன்டிக் ஹீரோவாக மாறினார். தமிழில் வெற்றி பெற்ற குஷி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார். இப்படத்தை தமிழில் இயக்கிய எஸ். ஜே சூர்யாவே தெலுங்கிலும் இயக்கினார். இதனை அடுத்து பவன் கல்யாணே இயக்கி நடித்த திரைப்படம் ஜானி இப்படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது.

இங்கு விஜய் நடித்த சில படங்களை அங்கு ரீமேக் செய்து நடித்து வந்தார் பவன் கல்யாண். இதன் பின் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கிய ஜல்சா திரைப்படத்தில் நடித்தார்.
இதன் பின் தெலுங்கு திரையுலகில் ஒரு பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்தது கப்பர் சிங் இப்படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க மூன்று ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது.

இவர் அங்கு அஜித் ஆக கருதப்பட்டாலும் செய்கின்ற வேலைகள் எல்லாம் சிம்புவை போலதான் நடிகர், பாடகர், நடன இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை எழுதுபவர் போன்ற பன்முகம் கொண்டவர். பாலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படத்தை தமிழில் அஜித் நடித்தார் கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது இவரது அடுத்த படத்திற்கான அப்டேட் வந்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கப்பர் சிங் படத்தை இயக்கிய ஹரிஸ் சங்கர் இயக்குகிறார். இப்படத்தை பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X