Rajinikanth-முருகன் ஃபோட்டோவுடன் ரஜினி..ஏன் சாமியார் காலில் விழவில்லை?..ரசிகர்கள் ஆரம்பித்த அடுத்த பஞ்சாயத்து
சென்னை: Thalaivar 170 (தலைவர் 170) தலைவர் 170 படப்பிடிப்பில் சாமியார் ஒருவர் ரஜினிக்கு முருகன் புகைப்படத்தை வழங்கி ஆசீர்வதித்தார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.
யார் யார் படத்தில்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்திருப்பதால் இருவரும் எப்படி நடிப்பார்கள் என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கின்றனர்.

தொடரும் ஷூட்டிங்: திருவனந்தபுரத்தில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்த பணகுடியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இப்போது மும்முரமாக ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற சாமியார் ரஜினிகாந்த்துக்கு முருகன் படத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.
ஏன் காலில் விழவில்லை: தற்போது அந்தப் புகைப்படத்தை மையமாக வைத்தும் ஒரு சிலர் பஞ்சாயத்தை ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது ஜெயிலர் ரிலீஸின்போது இமயமலை சென்றுவிட்டு யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து வணங்கினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து விளக்கமளித்திருந்த ரஜினி, துறவி என்றால் நான் வயது வித்தியாசம் பார்க்காமல் காலில் விழுவேன் என கூறியிருந்தார்.
தற்போது இந்த சாமியார் காலில் ஏன் ரஜினிகாந்த் விழவில்லை என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் ஒருவேளை அதிகாரம் படைத்த துறவியாக இருந்தால்தான் ரஜினிகாந்த் காலில் விழுவாரோ என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











