சிவகார்த்திகேயனுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லையா?.. என்னடா இது எஸ்கேக்கு வந்த சோதனை
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் மீது இமான் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்த சூழலில் தற்போது அவரது படத்துக்கு ஒரு சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் வரிசையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதன் காரணமாக எஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்து வந்த பிரின்ஸ் தோல்வியடைய கடைசியாக வந்த மாவீரன் ஹிட்டடித்தது.

இமான் விவகாரம்: சூழல் இப்படி இருக்க இசையமைப்பாளர் டி.இமான் கடந்த மாதம் தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “இனி சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அந்த துரோகத்தை எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. என்னுடைய குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அதை வெளியில் சொல்லவில்லை” என்றார்.
உடைந்த இமேஜ்: இமானின் இந்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு சிவாதான் காரணமாக இருப்பார் என்று ஒருதரப்பினர் கூறினர். ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்து; இமானுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் செய்யாமல் நியாயத்தின் பக்கம் நின்றார் அதைத்தான் இமான் துரோகம் என்கிறார் என்று விளக்கமளித்தார்.
புதிய சிக்கல்: இந்த சூழலில் சிவகார்த்திகேயனின் படத்துக்கு புதிய சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்தப் படம் பிரச்னையில் இருந்தது. சமீபத்தில் வெளியான அயலான் டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஏலியனை மையமாக வைத்து படம் உருவாகியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுப்பதற்காக தற்போது சிவகார்த்திகேயன் பலரிடம் முயற்சி செய்கிறாராம். அந்தவகையில் முதலில் சந்தானத்திடம் கேட்டதாகவும் ஆனால் அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; அதேபோல் வடிவேலுவிடம் கேட்டதற்கு அவரும் பெரிதாக எந்த ரெஸ்பான்ஸும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. யாருமே இப்படி ஒத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு சிவகார்த்திகேயன் இமேஜ் இப்போது உடைந்திருப்பதுதான் காரணம் என்கின்றனர் திரைத்துறையில் சிலர்.


Click it and Unblock the Notifications











