நடிகை ஷகீலாவின் காதலை நிராகரித்த பிரபல தயாரிப்பாளர்
திருவனந்தபுரம்: தயாரிப்பாளர் ஒருவர் மீது காதல் ஏற்பட்டதாக நடிகை ஷகீலா தெரிவித்துள்ளார்.
கவர்ச்சியால் திரையுலக ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது. ரிச்சா சட்டா ஷகீலாவாக நடித்துள்ளார்.
படத்திற்கு ஷகீலா- நாட் எ போர்ன் ஸ்டார் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஷகீலா
ஷகீலா அண்மையில் அளித்த பேட்டியில் தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். மோகன்லால் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தில் ஷகீலா நடித்திருந்தார். அப்பொழுது தான் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

ஆபரேஷன்
சோட்டா மும்பை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது என் அம்மாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் சோட்டா மும்பை பட தயாரிப்பாளர் மணியன்பிள்ளா ராஜுவிடம் கேட்டேன் என்று ஷகீலா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்
அம்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நான் கூறியதும் நான் நடித்து முடிக்காத காட்சிகளுக்கும் சேர்த்து முழு சம்பளத்தையும் தயாரிப்பாளர் கொடுத்தார். அவரின் அந்த குணம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்கிறார் ஷகீலா.

நிராகரிப்பு
தயாரிப்பாளர் ராஜு மீது எனக்கு காதல் ஏற்பட்டது. அவருக்கு நான் காதல் கடிதம் எழுதினேன். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை என்று ஷகீலா கூறியுள்ளார். ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











